ஒரு பெண் தன் போதகரிடம் சென்று “ஏன் எப்போதும் ஒரே காரியத்தை குறித்து உபதேசம் செய்து வருகிறார்?” என்று கேட்டாள். அதற்க்கு அவர் “மக்கள் மறந்துவிடுவார்கள்” என்று பதிலளித்தார் .
நாம் மறப்பதற்கு அநேக காரணங்கள் உண்டு – காலம் கடந்துபோவதினால், வயதாகுவதினால், அல்லது அதிக வேலைநிமித்தமாக கூட இருக்கலாம். எடுத்துக்காட்டாக மற்றவர்களின் பெயர், தேதிகள், முக்கியமான சில தகவல்கள் என்று பல உண்டு. எனது கணவர் அடிக்கடி சொல்வதுண்டு “புதிதாக ஒன்றை நியாபகம் வைத்துகொள்ள வேண்டுமானால், பழையதை ஒன்றை மனதிலிருந்து எடுத்துப்போட வேண்டியதாய் இருக்கிறது”.
அந்த போதகர் சொன்னது சரிதான் “ஜனங்கள் மறந்துவிடுவார்கள்”. முக்கியமாக தேவன் நமக்கு செய்த காரியங்களை இஸ்ரவேல் மக்களை போல நாமும் மறந்து விடுகிறோம். தேவன் அவர்களுக்கு செய்த பல அற்புதங்களை கண்டும், காலப்போக்கில் தேவன் அவர்களுக்கு அதை நினைவுபடுத்த வேண்டியதாய் இருந்தது. உபாகமம் 8ல் தேவன் அவர்களை தனிமைப்படுத்தி தங்களை பாதுகாத்து வந்ததினால் முழுமையாய் அவரில் சார்ந்திருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறது. வனாந்தரத்தில் அவர்களை பசியினால் சோதித்து மன்னாவை தந்து, அவர்களின் வஸ்திரங்கள் பழையதாய் போகாதபடிக்கு, சர்பங்களுக்கும் தேள்களுக்கும் தப்புவித்து, பாறையிலிருந்து தண்ணீர் தந்தது என அவர் செய்த காரியங்கள் அனைத்தையும் இந்த அதிகாரத்தில் அவர் நினைவுபடுத்தினார்.
தேவனுடைய “உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது” (சங். 100:5) . நம் இனி மறக்கும் சூழ்நிலையில் காணப்பட்டால் இதுவரை அவர் நம் ஜெபங்களுக்கு பதிலளித்ததை நினைவு கூறுவோம். அது முழுமையாக அவர் நமக்களித்த நன்மைகளையும், வாக்குத்தத்தங்களையும் நினைவுபடுத்தும்.
தேவனை நம்புவதில் போராட்டம் இருந்ததுண்டா? அவர் உங்களை காக்கிறார் என்பதை உணர்த்தும் வசங்கள் எது ?
அன்பின் பிதாவே, எப்போதும் உண்மை உள்ளவராய் இருப்பதற்கு நன்றி. நான் இன்று கடந்துசெல்லும் எல்லா காரியங்களிலும் உம்மை நம்பி சார்ந்திருக்கும் படி உதவிசெய்யும்.