வால்ட் டிஸ்னி அமைப்பின் பம்பி என்னும் சித்தரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் ( ஒரு குட்டி மானை பற்றியது) மீண்டும் வெளியானபோது அனேக பெற்றோர் தம் தம் பிள்ளைகளோடு தங்களுடைய குழந்தை பருவத்தை மீண்டும் அனுபவித்தார்கள் . இவர்களில் ஒரு பெண்ணின் கணவர் வேட்டையில் வல்லுநர். அனேக கோப்பைகள் பெற்றவர். அவளுடைய பிள்ளைகள் அருகில் இருக்க அந்த பெண், பம்பி ஒரு வேட்டைக்காரனாலே தன்னுடைய தாயை இழந்த காட்சியை, சற்றே கண் கலங்கின விதமாக பார்த்தாள். அப்பொழுது அவளுடைய மகன் அப்பாவித்தனமாக “செம்ம குறி” என்று கத்தினான். இன்னும் கூட அப்போது அவளுக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்தை குடும்பத்தார் நினைவூட்டுவர்!
நாட்கள் கடந்தபின் நம்முடைய பிள்ளைகள் சொல்லும் தர்மசங்கடமான காரியங்களைக் குறித்து நாம் சிரிக்க முடிகிறது. ஆனால் சங்கீதம் 136 –ல் காணும் ஜனங்கள் இப்படி செய்யும்போது நாம் என்ன சொல்வோம்? இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை இறைவன் தெரிந்துகொண்டு, மீட்டு அவர்களுக்கு காட்டிய அன்பை நித்தம் கொண்டாடுகிறார்கள்; ஆனால் அவர்களுடைய பகைவர்களுக்கு அது கொண்டாட்டம் அல்லவே அல்ல. இந்த சங்கீதம் அப்படிப்பட்டது: “எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்”; என்கிறது. (சங். 136:10, யாத். 12:29).
மற்றவர்கள் தங்கள் தாயார், சகோதரி, தந்தை, சகோதரன் – இவர்களை இழக்கும்போது ‘நல்ல குறி’ என்று சொல்வது போல அல்லவா இருக்கிறது?
இதற்காகத்தான் நாம் முழு கதையையும் படிக்க வேண்டும். இயேசுவின் உயிர்த்தெழுதளின் ஒளியை நாம் காணும் போதுதான் நம்முடைய குடும்பத்தின் கதைகள் – அவைகளுடைய கண்ணீர், சிரிப்பு உட்பட – அர்த்தங்கள் கொடுக்கும். இயேசுவை நாம் ஏற்றுக் கொண்டு புத்துயிர் பெற்றுக்கொள்ளும்போதுதான் அவர் தம்முடைய சொந்த ஜீவனை நமக்காக கொடுத்த அன்பை புரிந்துகொள்ள முடியும்.
நாம் எவ்வாறு இந்த சங்கீதத்தை புரிந்து கொள்ள முடியும்? எந்த வரிகள் இறைவனுடைய அன்பின் ஆழத்தைக் காட்டுகின்றன?
பிதாவே, நான் என்னில் அன்பு கூறுவதை விட நீர் என்னுடைய வாழ்விற்கு ஒரு பெரிய திட்டத்தை வைத்திருக்கிறதற்காக உம்மை துதிக்கிறேன்.