அவருடைய ஆலயத்திற்கு அருகாமையில் குறைந்த வருமானம் கொண்ட குடித்தனங்கள் வழியாக போய்க்கொண்டிருந்தபோது, அந்த போதகர் அவர்களுக்காக ஜெபிக்க ஆரம்பித்தார். ஒரு நாள் அங்கே தெருவில் கிடந்த ஒரு மனிதனைப் பார்த்து அவனுக்காக ஜெபிக்க முனையும்போது, அவன் இரண்டு மூன்று நாட்களாக சாப்பிடவில்லை என்று தெரிந்து கொண்டார். அந்த மனிதன் போதகரிடம் சாப்பாட்டிற்காக கொஞ்சம் காசு கேட்டான். இது அந்த சபையிலே வீடற்றவர்களுக்காக ஒரு திட்டம் உருவாக மூலமானது. ஆலயத்தின் ஆதரவு மூலம் சபை மக்கள் உணவு தயாரித்து வீடு இல்லாதவர்களுக்கு நாளைக்கு இரண்டு தரம் விநியோகித்தார்கள். அவ்வப்போது அவர்களை ஆலயத்திற்கும் கூட்டிவந்து ஜெபிப்பார்கள்; அவர்களுக்கு வேலை கிடைக்க உதவுவார்கள்.
இந்தவிதமான அக்கம்பக்கத்தாரை தொடும் திட்டம் இயேசு தம்முடைய சீஷர்களுக்கு நியமித்த ஆணைக்கு ஒப்பிடலாம். அவர் சொன்னார்:” வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுங்கள்”. (மத். 28:18,19).
அவருடைய பரிசுத்த ஆவி நம்மை யாவரையும் – வீடற்றவர்களையும் கூட – தொட இயக்கு கிறது. என்றாலும் நாம் தனியாக போக வேண்டியதில்லை. இயேசு சொன்னார்: “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்’’ (வச. 20).
அந்த போதகர் வீடு இல்லாத ஒரு மனிதன் கூட ஜெபிக்கும்போது இந்த உண்மையை உணர்ந்துகொண்டார். “எங்களுடைய இருதயங்களை நாங்கள் திறந்தபோது சபை மக்கள் எல்லாரும் எங்களோடு கைகோர்த்தார்கள்” என்று அவர் அறிக்கை செய்தார். இவ்விதமான தாக்கம் தான் பார்த்ததிலேயே மிக புனிதமானது என்று உரைத்தார்.
இதில் பாடம் என்ன? நாம் இயேசுவை எங்கும் எடுத்துரைக்க வேண்டும்.
இன்றைக்கு நீ உன் அக்கம் பக்கத்திலே எங்கு இயேசுவைப்பற்றி கூறலாம்? அவருடைய வல்லமையான சமூகம் உனக்கு எப்படி உதவி செய்யலாம்?
இயேசுவே, நான் உம்மை எங்கும் பறைசாற்ற என்னை இயக்கும்.