எதிர்அணியின்நபர்ஒருவர் பந்தைகாற்றில்அடித்தபொழுது என் கணவர் ஆலன் அந்த மைதானத்திற்கு வெளிச்சம் தந்து கொண்டிருந்த பெரிய கோபுர விளக்கின் கீழ் நின்று கொண்டிருந்தார. அந்த பந்தின் மீதே தன் கண்களை வைத்துக்கொண்டு, வேகமாக அந்த மைதானத்தின் மிகுந்த இருட்டான பகுதியை நோக்கி ஓடி அங்கிருந்த சங்கிலி வேலியில் மோதிக்கொண்டார்.
அன்று இரவு அவருக்கு ஒத்தடம் கொடுக்கும்போது “எப்படி இருக்கிறீர்கள்” என்று கேட்டேன். “என்னுடைய அணியில் யாராவது என்னை அந்த வேலியைப்பற்றி எச்சரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்றார் அவர்.
அணிகள் சிறந்த முறையில் இயங்க வேண்டுமென்றால் அவைகள் ஒன்றாக செயல்பட வேண்டும். அணியில் யாராவது ஒருவர் சத்தமிட்டு எச்சரித்திருந்தால் ஆலன் காயப்படுவதை தவிர்த்திருக்கலாம்.
திருச்சபையின் உறுப்பினர்களும் ஒன்றாக செயல்பட்டு ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்ளும் வண்ணமாகவே வடிவமைக்கக்கப்பட்டுள்ளது என்று வேதாகமம் நம்மை நினைவூட்டுகிறது.
இதைப்பற்றி பவுல் கூறுவது தேவன் நாம் ஒருவருக்கொருவர் எப்படி துணையாக நிற்க்கிறோம் என்று கவனிக்கிறார் ஏனென்றால் ஒருவர் செய்யும் காரியம் விசுவாசிகளின் சமுகம் முழுவதுமையே பாதிக்கக்கூடும் (கொலோ. 3:13-14). நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் சேவை செய்ய சந்தர்ப்பங்களை முழு அர்பணிப்போடும் சமாதானத்தோடும் பயன்படுத்தும்போது சபை செழித்து வளரும்.
பவுல் தம்முடைய வாசகர்களுக்கு “கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொள்ளுங்கள்” (கொலோசெயர் 3:16) என்கிறார். இவ்விதமாக ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி அன்பும் உண்மையுமான உறவுகளை வளர்க்கலாம். ஆண்டவருக்கு கீழ்ப்படிந்து அவரைத் துதித்து ஒன்றாக செழித்து வளரலாம்.
இந்த வாரம் நாம் வேதாகமத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு கிறிஸ்துவின் சரீரத்தில் எவ்வாறாக ஒற்றுமையையும் அன்பையும் வளர்க்கலாம்? கிறிஸ்துவின் வார்த்தை “நம்மில் பரிபூரணமாக” தங்குவது என்றால் என்ன?
பிதாவாகிய தேவனே, உம்முடைய வசனத்தால் என்னை போதிப்பதற்கும், உம்முடைய ஆவியால் என்னை வழிநடத்துவதற்கும், உம்முடைய மக்களைக் கொண்டு நான் கவனமாகவும் பொறுப்புள்ளவனாகவும் வைத்திருப்பதற்கு நன்றி.