தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஃப்ரெடி ப்ளோம் என்பவர் 2018-ல் 114 வயதை எட்டி உலகத்திலேயே நீண்ட ஆயுள் பெற்றவர் என்று கருதப்பட்டார். ரைட் சகோதரர்கள் ஃபிளயர் II உருவாக்கிய வருடம் 1904-ல் பிறந்து அவர் இரண்டு உலக மகா யுத்தங்கள், நிறவெறி கலகம், பொருளாதார மந்த நிலை இவை எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார். அவருடைய நீண்ட வாழ் நாளுக்கு என்ன காரணம் என்று அவரிடம் கேட்டபோது அந்த கேள்வியை அவர் தட்டி கழிக்கிறார். நம்மில் அநேகர் போல அவரும் ஆரோக்கியமான உணவுகளையோ பழக்கங்களையோ கையாண்டவர் அல்ல. ஆனால் தன்னுடைய நீண்ட வாழ்விற்கு ஒரு காரணம் மட்டும் சொல்லுகிறார். அது “ஒன்றே ஒன்று தான், அது தேவன். தேவனுக்கு எல்லா வல்லமையும் உண்டு… அவர் என்னை தாங்குகிறார்” என்றார்.
எதிரிகளின் அடக்குமுறையில் தவித்துக்கொண்டிருந்த இஸ்ரவேலருக்கு தேவன் கூறியவாக்குகளை போலவே ப்ளோம்-ம் எதிரொலிக்கிறார். “நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசா. 41:10) என்று தேவன்வாக்களிக்கிறார். நிலைமை எவ்வளவு மோசமாக மாறினாலும், மீட்பிற்கு வழியே தெரியவில்லை என்றாலும் அவர்கள் தம்முடைய மெண்மையான பாதுகாப்பில் இருக்கிறார்கள் என்று தேவன் உறுதியளிக்கிறார். ” நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்” (ஏசா. 41:10) என்று வலியுறுத்துகிறார்
எவ்வளவு வருடங்கள்நாம் வாழ்ந்தாலும் கடினங்கள் நம் கதவைத் தட்டதான் செய்யும்: திருமணவாழ்வில் சிக்கல். பிள்ளைகள் நம்மை கவனிக்காதது. மருத்துவரிடமிருந்து திகிலூட்டும் செய்தி. நம் விசுவாசத்தின் நிம்மித்தம் துன்பப்படுவதாக கூட இருக்கலாம். எப்படி இருந்தாலும் நம்முடைய தேவன் அவர் கரத்தை நீட்டி நம்மை இறுக்கமாகபற்றிக்கொள்ளுகிறார். அவருடைய பலத்த, மென்மையான கரங்களுக்குள் சேர்த்து அணைக்கிறார்.
நீங்கள் எப்பொழுது தனிமையாக இருப்பதாக உணர்ந்தீர்கள்? உங்கள் வாழ்க்கை தேவனுடைய பலத்த கரத்தில் இருப்பது உங்களை எப்படி ஊக்குவிக்கிறது?
ஆண்டவரே, நான் ஒரு மயிரிழையில் தொங்குவது போலிருக்கிறேன். நீர் எனக்கு உதவி செய்து என்னை தாங்குவீரேன்று நம்புகிறேன்.