ஒரு நாற்காலியை இழுத்து ஜாக்கி (ஜாகுடியே) படுக்கையின் பக்கத்தில் நான் அமர்ந்தபோது அந்த அறை மங்கலும் நிசப்தமுமாய் இருந்தது. மூன்று வருடங்களாக புற்று நோயுடன் போராடும் முன்னதாக ஜாக்கி மிகவும் துடிதுடிப்பான பெண். அந்த காட்சியை என் மனக்கண்ணால் பார்க்க முடிந்தது: மலர்ந்த முகம், புன்னகை ததும்பும் தோற்றம். இப்பொழுதோ அவள் அசையாமலும பேசாமலும் அந்த மருத்துவ மனையில் படுத்திருந்தாள்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சில வேத பகுதிகளை வாசிக்க நான் முடிவு செய்தேன். என்னுடைய வேதாகமத்தை எடுத்து 1 கொரிந்தியர் நிருபத்தில் ஒரு பகுதியை வாசிக்க ஆரம்பித்தேன்.

பிறகு நான் வெளியே வந்து என்னுடைய வாகனத்தில் தனிமையிலே உணர்ச்சிவசமாக சில நேரங்கள் செலவிட்ட பிறகு, எனக்கு ஒரு காரியம் மனதிற்கு வந்தது, அது என் கண்ணீரை குறைத்தது. அதாவது நான் அவளை மறுபடியும் பார்ப்பேன். என்னுடைய வருத்தத்தின் மிகுதியில் இறப்பு என்பது விசுவாசிகளுக்கு ஒரு தற்காலிகம் மட்டுமே (1 கொரிந்தியர் 15:21-22) என்பதை மறந்துவிட்டேன்.  நான் ஜாக்கியை மீண்டும் சந்திப்பேன் என்று அறிவேன் ஏனென்றால் எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட இயேசு மறித்து உயிர்த்தெழுந்தார் என்று நாங்கள் நம்பினோம். இயேசு மரித்தோரிலிருந்து எழுந்து உயிர்த்தெழுந்ததினால் மரணம் விசுவாசிகளை பிரிக்கும் வல்லமையை இழந்துவிட்டது. நாம் இறந்த பின்பு மோட்சத்தில் தேவனோடு, எல்லா ஆவிக்குள்ளான சகோதர சகோதரிகளோடு நித்திய காலமாக இருப்போம்.

இயேசு இன்றைக்கும் உயிரோடு இருக்கிறதினாலே, அவரை விசுவாசிப்பவர்கள் இழப்பிலும் துக்கத்திலும் கூட நம்பிக்கையுடையவர்களாய் இருப்பார்கள். மரணம் சிலுவையில் ஜெயமாக விழுங்கப்பட்டது.