நான் சிறுவனாக இருக்கும்பது “நீ பெரியவனாகும் போது யாராக இருக்க விரும்புகிறாய்” என்று அநேகர் கேட்பார்கள். ஒவ்வொரு முறையும் என் பதில் மாறும்: மருத்துவர், தீயணைப்பு படையினர், ஊழியக்காரர், விஞ்ஞானி அல்லது தொலைக்காட்சி நடிகர். இப்பொழுது நான்கு குழந்தைகளுக்கு தகப்பனாகியபின், இவ்விதமான கேள்வி எவ்வளவு கடினமாக காணப்படும் என்று நான் உணருகிறேன். சில சமயங்களில் “நீ எதிலே சிறந்து விளங்குவாய் என்று எனக்கு தெரியும்” என்று பிள்ளைகளிடத்தில் சொல்லத்தோன்றும். அவ்வப்போது பிள்ளைகள் தங்களை காண்பதற்கு மேலாகவே, பெற்றோர்கள் அவர்களில் காண்கிறார்கள்.
இது பவுல், தான் அன்புகூர்ந்து நேசித்த பிலிப்பிய சபை விசுவாசிகளிலே (பிலிப்பியர் 1:3) காண்பதிற்க்கு ஒப்பிடலாம். எல்லாம் கடந்த பின்பு அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள், என்று அவர்கள் கடை நிலைமையை அறிந்திருந்தார். ஏனெனில் வேதம் கதையின் இறுதியில் ஒரு அருமையான காட்சியை காண்பிக்கிறது: உயிர்த்தெழுதலும், எல்லா காரியங்களும் புதுப்பிக்கப்படுதலும் ( 1 கொரிந்தியர் 15, வெளிப்படுத்தின விஷேசம் 21 ஐ பார்க்க). பின்னுமாக இந்த கதையை எழுதியவர் யார் என்றும் அது சொல்லுகிறது.
சிறைச்சாலையிலிருந்து பிலிப்பியருக்கு பவுல் எழுதிய இந்த நிருபத்தின் முதல் வரிகள்: “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவார்” (பிலிப்பியர் 1:5) என்று பிலிப்பியருக்கு நினைவுபடுத்துகிறார்.
உங்களில் நல்ல வேலையை தொடங்கிய இயேசு அதை முடித்திடுவார். ‘முடிப்பது’ என்பது மிக முக்கியமான ஒரு வார்த்தை. ஏனென்றால் இறைவன் எதையும் அரைகுறையாக விடுவதில்லை.
உங்கள் கதையில் நீங்கள் எங்கு இருக்குறீர்கள்? உங்கள் கையிலிருக்கும் பேனாவை இயேசு எடுத்து உங்கள் கதையை எழுதி முடிக்க நீங்கள் எப்படி அவரை நம்புகுறீர்கள்?
அன்புள்ள இயேசுவே, நீர் என்னுடைய கதைக்கு பொறுப்பாக இருக்குறீர் நானாக ஒன்றும் செய்ய இயலாது. என் வாழ்வை உம்மண்டை ஒப்புவிக்கிறேன். உம்மிலே என் நம்பிக்கையை வைக்க உதவும்.
உங்களை பற்றியும், நீங்கள் எப்படி சிறப்பாக இறைவனுக்கு ஊழியம் செய்யலாம் என்பதை பற்றியும் இன்னும் அறிய வேண்டுமானால் தொடர்பு கொள்ள வேண்டிய இணைய தளம்: christianuniversity.org/SF108.