நலம் பெற வாழ்த்தி வந்த அட்டையில் எழுதியிருந்த வசனம் அவளுடைய நிலைமைக்கு பொருந்துவதாக லீசாவுக்கு தெரியவில்லை: “கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்”. 2 இராஜாக்கள் 6:17  எனக்கோ புற்றுநோய் உள்ளது. ஒரு குழந்தையை இப்போதுதான் இழுந்து போனேன். தேவதூதர்களை பற்றிய இந்த வசனம் எனக்கு அல்ல என்று குழம்பினாள்.

பிறகு, ஒவ்வொருவராக தேவதூதர்கள் வர ஆரம்பித்தார்கள்! புற்றுநோயிலிருந்து குணமான அநேகர் தங்களுடைய நேரத்தை அவளுக்கு ஒதுக்கி அவளோடு பேசினார்கள். அவளுடைய கணவன் வெளிநாட்டில் இராணுவத்திலிருந்து சீக்கிரமாக விடுவிக்கப்பட்டு வீடு திரும்பினான். அவள் கூட ஜெபிக்க, நண்பர்கள் வந்தார்கள். ஆனால் அவள் எப்பொழுது இறைவனுடைய அன்பை மிகவும் உணர்ந்தாள் தெரியுமா? அவளுடைய தோழி ப்பட்டி (Patty) இரண்டு திசு காகிதம் (tissue) பெட்டிகளுடன் அவளுடைய வீட்டுக்கு வந்து லீசா பக்கத்தில் அதை வைத்து விட்டு அழத் தொடங்கின போதுதான், ப்பட்டிக்கு தெரியும். அவளுக்கும் குழந்தைகளை இழந்த அனுபவம் இருந்தது.

“மற்ற எல்லாவற்றையும் காட்டிலும் இது எனக்கு மிகவும் அருமையானது” என்றாள் லீசா. அங்த  வாழ்த்து அட்டை  இப்பொழுது புரிகிறது. தேவதூதர் எப்பொழுதுமே என்னை சுற்றி இருந்திருக்கிறார்கள்.

எலிசாவை ஒரு படை சுற்றி இருக்கும்போது தேவதூதர்கள் எலிசாவை காத்துக் கொண்டனர். அவனுடைய வேலைக்காரன் அவர்களை பார்க்க முடியவில்லை. எலிசாவை நோக்கி: “ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம்” என்றான் ( வ 15). அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி: “கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும்” (வ 17) என்றான்;

நாம் தேவனை நோக்கி பார்க்கும்பொழுது தான் நாமிருக்கும் அந்த நெருக்கடியில் எது முக்கியம் என்று தெரிய வரும்; அவர் நம்மை தனியே விடமாட்டார். கர்த்தருடைய ஆறுதலளிக்கும் சமுகம்  நம்மை விடுவதில்லை. பல வழிகளில் அவர் தம்முடைய அன்பை நமக்கு காண்பிக்கிறார்.