என்னுடைய வளர்ந்த மகன் ஒரு கடினமான சூழ்நிலையை சந்தித்த போது, என் தந்தையின் வேலையில்லா ஆண்டில் தேவனின் தொடர்ந்த கவனிப்பு மற்றும் பராமரிப்பையும் குறித்து ஞாபகப்படுத்தினேன். என்னுடைய தாயார் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி தோற்றுப்போனபோது, தேவன் எங்கள் குடும்பத்தை பெலப்படுத்தின சூழ்நிலையை நினைவுகூர்ந்தேன். வேதத்தில் தேவனுடைய கிருபையை விவரிக்கும் சூழ்நிலைகளை எடுத்துரைத்து, அவர் தம்முடைய வார்த்தையை காத்துக்கொள்வதில் நல்லவர் என்பதை உறுதிப்படுத்தினேன். தேவன் வகுத்த குடும்ப நடைபாதையில் என்னுடைய மகனை அழைத்துச்சென்றேன். எங்ளுடைய குடும்பத்தின் பள்ளத்தாக்குகள் மற்றும் மலையுச்சி போன்ற சூழ்நிலைகளில் தேவன் எப்படி சார்திருக்கக்கூடியவராய் இருந்தார் என்பதை அவனுக்கு நினைப்பூட்டினேன். நாங்கள் போராடிக்கொண்டிருந்தாலும், கொண்டாடிக்கொண்டிருந்தாலும், தேவனுடைய பிரசன்னம், அன்பு மற்றும் கிருபை எங்களுக்கு போதுமானதாயிருந்தது.
இருப்பினும், இந்த விசுவாசத்தை பெலப்படுத்தும் யுக்தி என்னுடைது என்று நான் கோரினாலும், எதிர்கால சந்ததியினர் தேவனை விசுவாசிக்க தூண்டுவதற்கு நாம் நிகழ்சிகளை பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்று தேவன் வடிவமைத்திருக்கிறார். இஸ்ரவேலர்கள் கடந்த காலத்தில் தேவன் செய்த எல்லாவற்றையும் கண்டதை நினைவுகூர்ந்த போது, அவர் நம்பிக்கையின் உருளைக்கற்களை அவர்களுடைய தெய்வீகமாக வகுத்த நடைபாதையில் வைத்தார்.
இஸ்ரவேலர்கள், தேவனைப் பின்பற்றும்போது அவர் தம்முடைய வாக்குதத்தங்களில் உண்மையுள்ளவராக இருந்ததற்கு சாட்சியாயிருந்தனர். (உபா. 4:3-6). அவர், அவர்களுடைய ஜெபத்தை எப்போதும் கேட்டும் பதிலளித்தும் இருக்கிறார். (வச. 7). இளைய தலைமுறையினருடன், மகிழ்ச்சியுடன் கடந்த கால அனுபவங்களை இஸ்ரவேலர்கள் நினைவிற்கு கொண்டு வந்து (வச. 9), ஒரே சத்திய தேவனுடைய பரிசுத்தமுள்ள மற்றும் பாதுகாக்கப்பட்ட வார்த்தைகளை பகிர்ந்துக்கொண்டனர் (வச. 10).
நம்முடைய மகாப் பெரிய தேவனுடைய மகத்துவம், இரக்கம், மற்றும் நெருக்கமான அன்பைப் பற்றி நாம் கூறும்போது அவருடைய உறுதியான நீடித்த நம்பகத்தன்மை நம்முடைய திடநம்பிக்கையும் மற்றவர்களுடைய விசுவாசத்தையும் பெலப்படுத்துகிறது.
தேவன் தங்களுக்கு செய்ததை பகிர்ந்துக்கொண்டதின் மூலம் உங்களுடைய ஆவிக்குரிய வளர்சிக்கு முதலீடு செய்தவர் யார்? அவருடைய கிருபையையும் அன்பையும் பின்வரும் தலைமுறையினருக்கு எந்தெந்த ஆக்கபூர்வமான வழிகளில் பகிர்ந்துக்கொள்வீர்கள்?
மகத்துவமுள்ள தேவனே, துதிக்கத்தூண்டும் பாதைகளை வகுத்து தந்ததற்காகவும், தலைமுறைகளைக் கடந்து உறுதியான நம்பிக்கையுடன் நடக்க எனக்கு அதிகாரம்
அளித்ததற்காக நன்றி.