ஹேமா நினைத்தாள் “என்ன ஒரு வீணான நேரம்”. அவளுடைய காப்பீட்டு முகவர் அவர்கள் மீண்டும் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இது மற்றொரு சலிப்பான விற்பனைக் காரியம் என்று ஹேமாவுக்குத் தெரியும், அனால், அவளுடைய விசுவாசத்தைக் குறித்துப் பேச ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தாள்.
முகவரின் புருவங்கள் பச்சை குத்தப்பட்டிருக்கிறதை கவனித்த அவள், தயக்கத்துடன் ஏன் என்று கேட்டாள். அந்தப் பெண் இது அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்று நம்பி இப்படி செய்திருக்கிறாள் என்பதை அறிந்துக்கொண்டாள். ஹேமாவின் கேள்வி, எப்போதும் வழக்கமாக பேசும் நிதியைப் பற்றிய பேச்சிலிருந்து ஒரு ஆபத்தான மாற்றுப் பாதையியிருந்தாலும், அதிர்ஷ்டம் மற்றும் விசுவாசத்தைப் பற்றி உரையாடவும், தான் ஏன் இயேசுவை சார்ந்து வாழ்கிறார் என்பதைப் பற்றி பேசவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. அந்ந வீணான நேரம் ஒரு தெய்வீக நியமனமாய் மாறியது.
இயேசுவும் ஒரு ஆபத்தான மாற்றுப் பாதையில் சென்றார். யூதேயதவிலிருந்து கலிலேயாவுக்கு பிரயாணப்படும்போது, ஒரு யூதன் நினைத்துப் பார்க்க முடியாத காரியமான, ஒரு சமாரியப்பெண், மற்ற சமாரியர்களும் அவளை தவிர்த்த ஒரு விபச்சார பெண்ணிடம் பேசுவதற்தான மாற்றுப்பாதையை தெரிந்துக்கொண்டார். ஆனாலும் தன்னுடைய உரையாடல் அனேகரை இரட்சிப்புக்குள்ளாக நடத்தும்படியாக முடிந்தது (யோவா. 4:1-26, 39-42.).
நீங்கள் பார்கக்கூட விரும்பாத ஒருவரை சந்திக்கிறீர்களா? நீங்கள் சாதாரணமாக தவிர்க்கும் பக்கத்து வீட்டுக்காரரிடம் மோதிக்கொண்டிருக்கிறீர்களா? “சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும்” எப்போதும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க ஆயத்தமாயிருக்க வேண்டுமென்று வேதாகமம் நாமக்கு நினைவுபடுத்துகிறது (2 தீமோ. 4:2). ஒரு ஆபத்தான மாற்றுப்பாதையைக் கருத்தில் கொள்ளுங்கள். யாருக்குத் தெரியும். தேவன், அவரைக்குறித்துப் பேச ஒரு தெய்வீக வாய்ப்பை இன்றைக்குக் கொடுக்கலாம்!
நீங்கள் இன்றைக்கு யாரை சந்திக்கப்போகிறீர்கள்? இயேசுவைப் பற்றி பேச இது எப்படி வாய்ப்பாக இருக்கப்போகிறது ? சுவிசேஷத்தைப் தைரியமாக, அன்பான மற்றும் உணர்திறனுடன் பகிர்ந்துக்கொள்ள எப்படி மாற்றுப்பாதையை தெரிந்துக்கொள்வீர்கள்?
இயேசுவே, உம்முடை அன்பை பகிர்ந்துக்கொள்ள நீர் திறந்து தரும் வாய்ப்புகளை கண்டுக்கொள்ளவும் உம்மைக் குறித்து மற்றவர்களிடம் பேசவும் தைரியத்தையும் தாரும்.