நாங்கள் அதை கவனித்தப்போது கிட்டத்தட்ட வீட்டில் இருந்தோம் – எங்கள் காரின் வெப்பநிலை அளவின் ஊசி உயர்ந்துக்கொண்டிருந்தது. நாங்கள் உள்ளே வந்த பிறகு என்ஜினை நிறுத்திவிட்டு வெளியே குதித்தேன். முன்பக்கத்திலிருந்து புகை எழும்பிக்கொண்டிருந்தது. ஒரு பொரித்த முட்டையைப்போல என்ஜின் வெப்பத்தினால் ‘ஸ்’ என்ற ஒலி உண்டாக்கிக்கொண்டிருந்தது. நான் காரை சில அடிகள் உயர்த்தி பார்த்த போது அடியில் குட்டை (சகதி) இருந்ததைக் கண்டேன். உடனடியாக என்ன நடந்தது என்பதை அறிந்துக் கொண்டேன். அங்கிருந்த கேஸ்கெட் தூக்கி வீசப்பட்டிருந்தது.
நான் புலம்பினேன். நாங்கள் மற்ற விலையுயர்ந்த பழுதுபார்ப்புகளுக்கு பணத்தை செலவு செய்துள்ளோம்.
ஏன் காரியங்கள் சரியாக வேலை செய்வதில்லை? நான் மிகவும் கசப்புடன் முணுமுணுத்தேன். பொருட்கள் உடைவது ஏன் நிறுத்தப்படவில்லை?
நீங்கள் தொடர்புபடுத்த முடியுமா? சில நேரங்களில் நாம் ஒரு நெருக்கடியைத் தவிர்க்கிறோம், ஒரு பிரச்சனையைத் தீர்க்கிறோம், ஒரு பெரிய ரசீதுக்காக பணம் செலுத்துகிறோம் – ஆனால் இன்னொரு பிரச்சனையை சந்திக்கிறோம். சில நேரங்களில் சிக்கல்கள் இயந்திரத்தை அழிப்பதை விட மிகப் பெரியவை : எதிர்பாராத நோயறிதல், அகால மரணம், ஒரு பயங்கரமான இழப்பு.
அப்படிப்பட்ட தருணங்களில், நாம் குறைவாய் உடைக்கப்பட்ட மற்றும் குறைந்த சிக்கலான உலகத்திற்காக ஏங்குகிறோம். இயேசு வாக்குப்பண்ணின உலகம் வருகிறது. ஆனால் இன்னும் இல்லை : “உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு” யோவான் 16ம் அதிகாரத்திலே இயேசு தம்முடைய சீ ஷர்களுக்கு ஞாபகப்படுத்தினார். “ஆனாலும் திடன் கொள்ளுங்கள்! நான் உலகத்தை ஜெயித்தேன்” (வச. 33) விசுவாசத்திற்காக துன்புறுத்தப்படுதல் போன்ற கடுமையான பிரச்சனைகளைக் குறித்து இந்த அதிகாரத்தில் இயேசு பேசியிருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட பிரச்சனை அவரை நம்புகிறவர்களுக்கு ஒருபோதும் கடைசியானதாயிருக்காது என்று அவர் கற்பித்தார்.
சிக்கல்கள் சிறிதாயிருந்தாலும், பெரிதாயிருந்தாலும் நம்மை சோர்வில் கொண்டு செல்லும். ஆனால், அவருடன் இருக்கும்போது ஓர நல்ல நாளையை நமக்கு கொடுக்கும் இயேசுவின் வாக்கால், நம்முடைய சிக்கல்கள் நம்மை ஒருபோதும் கீழே தள்ளிவிடாது என்று ஊக்குவிக்கப்படுகிறோம்.
உங்களுடைய சிக்கல்களை தேவனிடம் ஒப்படைப்பது என்பது உங்களுக்கு எப்படி தோன்றுகிறது? நாள் முழுவதும் உங்கள் கவலைகளை அவரிடம் ஒப்படைத்துவிட எது உங்களைத் தூண்டுகிறது?
தகப்பனே, சிக்கல்கள் ஒருபோதும் தூரத்தில் இல்லை. ஆனால் அவைகள் அருகில் இருக்கும்போது, நீர் மிகவும் அருகில் இருக்கிறீர். கஷ்டங்கள் எவ்வளவு பெரிதாயிருந்தாலும், நம்பிக்கையுடன். உம்மை பற்றிக்கொள்ள உதவிசெய்யும்.