இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள புனித திருத்துவ தேவாலயத்தில் ஊழியராக சார்ல்ஸ் சிமியோன் நியமிக்கப்பட்ட போது அநேக ஆண்டுகள் அவர் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது. சிமியோனுக்கு பதிலாக இணை ஊழியர் நியமிக்கப்பட வேண்டும் என்று பெரும்பாலான சபையினர் விரும்பியதால் அவரைக் குறித்து வதந்திகளைப் பரப்பி அவருடைய ஊழியத்தை நிராகரித்தனர் – மட்டுமல்லாமல் சில நேரங்களில் அவதை ஆலயத்திற்கு வெளியே விட்டு பூட்டினர். ஆனால் தேவனின் ஆவியால் நிரம்பப்பட விரும்பிய சிமியோன், வாழ்வதற்கு சில கொள்கைகளை உருவாக்கி கொண்டு வதந்திகளை சமாளிக்க முயன்றார். “ஒருவர், வதந்திகள் முற்றிலும் உண்மையாக இல்லாவிட்டால், நம்பக்கூடாது. மறுபக்கத்தை கேட்டால் வதந்திகளின் வித்தியாசமான விஷயங்களை கேட்க நேரிடும்”.
இந்தச் சூழ்நிலையில், சிமியோன் “வதந்திகளும், தீங்கிழைக்கும் பேச்சுக்களும் ஒருவரோடொருவர் அன்பு செலுத்த முடியாது. இப்படிப்பட்டவைகளை பேசக்கூடாது” என்று தேவன் தம்முடைய மக்களுக்கு கொடுத்த கட்டளையைப் பின்பற்றினார். தேவனின் பத்துக் கட்டளைகளில் ஒன்று மக்கள் ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாக வாழவேண்டும் என்பதை பிரதிபலிக்கிறது : “பிறனுக்கு விரோதமாக பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக” (யாத்திராகமம் 20:16). “அபாண்டமான சொல்லை ஏற்றுக் கொள்ளாயாக (யாத். 23:1) என்று யத்திராகமத்தில் மற்றொரு கட்டளை இதை வலுப்படுத்துகிறது.
நாம் ஒவ்வொருவரும் வதந்திகளையும் தவறான அறிக்கைகளையும் பரப்பாவிட்டாலும், அவைகளைக் கேட்ட அந்த கணத்திலே அவைகளை நிறுத்தியிருந்தால் இந்த உலகம் எப்படி வித்தியாசமாக இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். நாம் அன்பினால் உண்மையைப் பேசி தேவனுக்கு மகிமையுண்டாக நம்முடைய வார்த்தைகளை உபயோகிக்க பரிசுத்த ஆவியின் உதவியை நாடுவோமாக.
நீங்கள் எதிர்ப்பை சந்திக்கும்போது எது உங்களுக்கு உதவி செய்தது? வதந்திகளை கேட்டபோது நீங்கள் எப்படி எதிர்கொண்டிருக்கிறீர்கள்?
இயேசுவே, உம்முடைய சத்தியத்தை அன்புடன் பேச உதவி செய்யும். சமாதானம், கிருபை மற்றும் உற்சாகத்த கொடுக்கும் வார்த்தைகளை எனக்குத் தாரும்.