ஸ்கேலிங் (அளவிடுதல்) : இது உடற்பயிற்சி உலகத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சொல், யார் வேண்டுமானாலும் பங்குக்கொள்ள அனுமதிக்கும் சொல். உதாரணத்திற்கு புஷ்அப் (தண்டால்)ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சி என்றால் நீங்கள் ஒரே வரிசையில் பத்து முறை செய்ய முடியும் ஆனால் எனக்கு நான்கு முறை தான் செய்ய முடியும். அந்த நேரத்தில் என்னைடைய உடற்தகுதிக்கு ஏற்ப என்னுடைய பயிற்றுவிப்பாளர் என்னை புஷ்அப் அளவிடுதலை அதிகப்படுத்த ஊக்குவிப்பார். நாம் எல்லோரும் ஒரே அளவிடுதலில் இல்லை ஆனால் ஒரே திசையில் நாம் செல்ல முடியும். “உன்னுடைய புஷ்அப்புகளை உன் முழு பெலத்தோடு செய். மற்றவர்களோடு உன்னை ஒப்பிடாதே. உன்னுடைய அசைவுகளை அளவீடு செய். உன்னால் முடிந்ததை தொடர்ந்து செய், ஏழு முறை செய்யும்போதும் அல்லது ஒரு நாளில் பத்து முறை செய்யும்போது அது உனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருக்கும”; என்று அவர் கூறுவார்.

கொடுப்பதை குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் “உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2 கொரி. 9:7) என்று கூறுகிறார். ஆனால் அவர் கொரிந்து பட்டணத்தின் விசுவாசிகளுக்கும் நமக்கும் அளித்த ஊக்கம் – அளவீடுகளில் மாறுபாடாகும். அவனவன் தன் மனதில் நியமித்தப்படியே கொடுக்கக்கடவன்.  (வச. 7). நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு  கொடுக்கும் நிலைகளில் காணப்படுகிறோம் மற்றும் சில நேரங்களில் அந்த நிலைகள் காலத்திற்கேற்றவாறு மாறுபடும். ஓப்பிடுதலினால் எந்த பயனுமில்லை ஆனால் அணுகுமுறை பயனுள்ளது. நீங்கள் எங்கு இருந்தாலும் அதற்கேற்றவாறு தாராளமாகக் கொடுங்கள் (வச. 6). இப்படிப்பட்ட மகிழ்ச்சியாக கொடுக்கும் நடைமுறை நம்முடைய ஒவ்வொரு வழியும் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையுடன் செறிவூட்டப்படுவதாகவும் வாக்குபண்ணியிருக்கிறார். இது “தேவனுக்கு நன்றியுள்ளவர்களாயிருக்க” உதவுகிறது.