என் தோழி அனிதா, ஒரு கணக்கியல் நிறுவனத்தின் ஊதியத்தை கணக்கிடுகிறார். இது ஒரு நேரடியான வேலையாக கருதப்படலாம், ஆனால் முதலாளிகள் தங்கள் தகவல்களை குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னரே சமர்ப்பிக்கின்றனர். ஊழியர்கள் தாமதமின்றி தங்கள் பணத்தை பெற்றுக்கொள்ள, அனிதா பெரும்பாலும் நீண்ட நேரம் வேலை செய்தார். மளிகைப் பொருட்களை வாங்குவதற்கும், மருந்துகளை வாங்குவதற்கும், வீட்டுவசதிகளுக்கு செலவிடவும் இந்த பணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் குடும்பங்ளை கருத்தில் கொண்டு அனிதா இப்படி செய்கிறார்.

அனிதாவுடைய இரக்கமுள்ள அணுகுமுறை எனக்கு இயேசுவை சுட்டிக்காட்டுகிறது. உலகத்தில், சில நேரங்களில், இயேசு தனக்கு சிரமமாக இருக்கும் போதும்கூட ஊழியம் செய்தார். உதாரணமாக, யோவான் ஸ்நானகன் கொல்லப்பட்ட செய்தியை கேட்ட பிறகு, இயேசு சற்று தனியாக இருக்க விரும்பி படவில் ஏறி தனிமைப்படுத்தப்பட்ட இடத்தை தேடி போனார் (மத். 14:13). ஒருவேளை அவருக்கு தன்னுடைய உறவினரான யோவானுக்காக துக்கப்படவும், அந்த துக்கத்திலும் அவர் ஜெபிக்கவும் தேவைப்பட்டிருந்தது.

ஒரே ஒரு சிக்கல் இருந்தது. திரளான ஜனங்கள் அவருக்கு பின்னே அங்கு போனார்கள். இந்த மக்களுக்கு அனேக சரீர தேவைகள் இருந்தது.  அவர்களை அனுப்பி விடுவது மிகவும் எளிதானதாக இருந்திருக்கும் ஆனால் இயேசு அங்கே வந்து அவர்களைப் பார்த்தபொழுது, அவர்கள் மேல் மனதுருகி அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவாகளை சொஸ்தமாக்கினார் (வச. 14).

இந்த உலகத்தில், இயேசுவினுடைய ஊழியத்தின் அழைப்பு மக்களுக்கு உபதேசிப்பதும் வியாதியுள்ளவர்களை சொஸ்தமாக்குவதும் ஒரு பாகமாயிருந்தாலும், அவருடைய பச்சாதாபம், அவர் தன்னுடைய பொறுப்புகளை நிறைவேற்றுவதை பாதித்திருந்தது. தேவன் தாமே, நம்முடைய வாழ்க்கையில் அவருடைய இரக்கத்தை அடையாளம்கண்டுக்கொள்ள உதவி செய்து அதையே நாம் மற்றவர்களுக்கும் செய்ய பெலத்தைத் தருவாராக.