எனது பிரசங்க நாட்களில் சில ஞாயிறுகளின் காலை நேரங்களை ஒரு தாழ்வான புழுவைப்போல அணுகினேன். அதற்கு முந்தின வாரத்தில், நான் ஒரு நல்ல கணவனாய், தகப்பனாய் மற்றும் நண்பனாய் இருக்கவில்லை. தேவன் என்னை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன் நான் ஒரு சரியான வாழ்க்கை வாழ வேண்டியிருந்தது. ஆகவே வரும் வாரத்தில் சிறப்பாக வாழ முயற்சிக்க முடியும் என சபதம் செய்து என் பிரசங்கத்தை நடத்தினேன்.
அது ஒரு நல்ல அணுகுமுறை அல்ல. கலாத்தியர் 3ம் அதிகாரத்தில. தேவன் தொடர்ந்து இலவச பரிசாக தமது ஆவியை அளித்து நம்மில் வல்லமையாய் கிரியை செய்கிறார் – நாம் எதையோ செய்திருக்கிறோமென்றோ அல்லது அதற்கு தகுதியானவர்கள் என்றோ அல்ல.
ஆபிரகாமின் வாழ்க்கை அதை நிரூபிக்கிறது. சில நேரங்களில் அவர் ஒரு நல்ல கணவனாக இருக்கவில்லை. உதாரணமாக, இரண்டு முறை தன்னை காப்பாற்றிக்கொள்ள, பொய் சொல்லி, சாராளின் வாழ்க்கையை ஆபத்தில் சிக்க வைத்து விட்டார். (ஆதியாகமம் 12:10-20; 20:1-18). இருப்பினும் தன்னுடைய விசுவாசத்தை தேவன் நீதியாக எண்ணினார் (கலா. 3:6). ஆபிரகாம் தன்னுடைய தோல்விகளிலும் தன்னை தேவனுடைய கரங்களில் ஒப்புக்கொடுத்தார். இதனால் தன்னுடைய வம்சத்தின் மூலம் இந்த உலகத்திற்கே இரட்சிப்பை கொண்டு வர தேவன் அவரை பயன்படுத்தினார்.
தவறாக நடத்துக்கொள்வதற்கு எந்த நியாயத்தீர்ப்பும் இல்லை. நாம் கீழ்படிதலோடு அவரை பின்பற்ற இயேசு நம்மிடத்தில் கேட்கிறார், அதற்கான வழிமுறைகளையும் எற்படுத்தி கொடுக்கிறார். ஒரு கடினமான, மனந்திரும்பாத இதயம், அவர் நமக்காக வைத்திருக்கும் நோக்கங்களுக்கு தடையாக இருக்கும். ஆனால். அவர் நம்மை பயன்படுத்தும் முறை நம்முடைய நீண்ட நல்ல நடத்தை முறையை சார்ந்தது அல்ல. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மை பயன்படுத்த தேவனுடை சித்தம் மட்டுமே அடிப்படையானது : இரட்சிக்கப்பட்டு அவருடைய கிருபையில் வளருவதே. அந்த கிருபைக்காக நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. அது முற்றிலும் இலவசம்.
நீங்கள் தகுதியற்றவர்களாக உணர்ந்த சூழ்நிலைகளை சிந்தித்துக் கொள்ளுங்கள். தேவன் அந்த தருணங்களை எப்படி பார்க்கிறார்? நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்.?
தேவனே நீர் என்னை ஆசீர்வதித்து என் தோல்விகளிலும் என்னை பயன்படுத்துவதற்காக நன்றி.