குழந்தைகளின் இசை நிகழ்ச்சியொன்றில், ஓர் ஆசிரியரும், ஒரு மாணவனும் ஒரு பியானோவின் முன்னால் அமர்ந்திருந்தனர்.      இருவரும் சேர்ந்து இசைக்கும் பாடலைத் தொடங்குவதற்கு முன்பு, அந்த ஆசிரியர் குனிந்து, அந்த மாணவனிடம், சில கடைசி நேர ஆலோசனைகளைக் கூறினார். அந்த இசைக் கருவியிலிருந்து இசை கொட்டிய போது, அந்த மாணவன் ஒரு எளிய ராகத்தை வாசித்தான், அந்த ஆசிரியர், அவனோடு இசைத்து, அந்த இசைக்கு ஓர் ஆழத்தையும், வளமையையும் கொடுத்தார். அந்த இசை முடிவுற்றபோது, அந்த ஆசிரியர் தன் தலையை அசைத்து, தன்னுடைய அங்கிகாரத்தைத் தெரிவித்தார்.

 நாம் இயேசுவோடு வாழும் வாழ்க்கையும் தனிப்பாடலைப் போன்றதல்ல, இருவர் சேர்ந்து பாடும் பாடலைப் போன்றது. சில வேளைகளில், அவர் “என் அருகில் அமர்ந்திருக்கிறார்”, அவருடைய வல்லமையினாலும், வழி நடத்தலாலும் தான், “என்னால் இயங்க முடிகிறது” என்பதையே நான் மறந்துவிடுகின்றேன். என்னுடைய சொந்த முயற்சியால், நான் சரியான சுரங்களை இசைக்க முயற்சிக்கிறேன்- என்னுடைய சொந்த பெலனால், நான் தேவனுக்கு கீழ்ப்படிய முயற்சிக்கிறேன், ஆனால் அது பலனற்றதாகவும் போலியாகவும் தான் முடிகின்றது. என்னுடைய கொஞ்ச பெலனைக் கொண்டு, நான் பிரச்சனைகளை தீர்க்க விரும்புகின்றேன், ஆனால், அது எனக்கும் பிறருக்கும் இடையே முரண்பாட்டைத் தான் கொண்டு வருகின்றது.

என்னுடைய ஆசிரியர் என் அருகிலேயே இருந்தால், காரியங்கள் வேறு விதமாக இருக்கின்றது. எனக்கு உதவும்படி, நான் தேவனைச் சார்ந்து கொள்ளும் போது, என்னுடைய வாழ்வு தேவனை மகிமைப் படுத்துவதாக உள்ளது. நான் சந்தோஷத்தோடு பணி செய்கின்றேன், தாராளமாக அன்பு செய்கின்றேன், என்னுடைய உறவுகளைத்  தேவன் ஆசீர்வதிக்கும் போது, அது ஆச்சரியமாக உள்ளது. இயேசு தன்னுடைய முதல் சீஷர்களிடம், “ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக் கூடாது” (யோவா.15:5) என்றார்.

ஒவ்வொரு நாளும் நாம் நம்முடைய நல்ல ஆசிரியருடன்    இணைந்து, இருவரும் பாடும் போது, அவருடைய கிருபையும், வல்லமையும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்வின் இசையை  சிறப்பாக வாசிக்க உதவும்.