விஜய் ஒரு சட்ட நிறுவனத்தில் பணிபுரிந்ததால், சுரேஷின்  நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கமுடிந்தது. இருவரும் நண்பர்களாய் இருந்தனர். விஜய் அந்த நிறுவனத்தின் லட்சக்கணக்கான பணத்தை கையாடல் செய்ததை அறிந்த போது சுரேஷ், மிகவும் வருத்தப்பட்டான், கோபப்பட்டான், ஆனால், கிறிஸ்துவின் விசுவாசியான, அவனுடைய பாஸ் அவனுக்கு ஞானமான ஆலோசனை வழங்கினார். விஜய் மிகுந்த வெட்கத்தால், மனம் வருந்துவதை அவனுடைய பாஸ் கண்டார். அவர் சுரேஷிடம், விஜய் மீதுள்ள குற்றச் சாட்டுகளனைத்தையும் கைவிட்டு விட ஆலோசனை கூறினார், அவர் விஜயை வேலைக்கு அமர்த்தினார்.  “அவன் இழப்பைச் சரிக்கட்டும் வரை, அவனுக்கு சாதாரண அளவு சம்பளம் மட்டும் வழங்கு, நீ இவனைப் போல அதிக நன்றியும் உண்மையும் உள்ள ஒரு வேலையாளைப் பார்க்க முடியாது” என்றார். சுரேஷ் அப்படியே செய்தார், விஜயும் அப்படியே மாறினான்.

சவுல் அரசனின் பேரனான மேவிபோசேத் எந்த தவறும் செய்யவில்லை, ஆனாலும், தாவீது அரசனான போது, அவன் ஒரு இக்கட்டான நிலையில் இருந்தான். அநேக ராஜாக்கள், முந்தைய அரச பரம்பரையினரை கொன்று விடுவர். ஆனால், தாவீது, சவுல் அரசனின் மகனான யோனத்தானை நேசித்தான், எனவே அவனுடைய மகனை தன்னுடைய மகனாகப் பாவித்தான். (2 சாமுவேல் 9:1-13). அவனுடைய இரக்கம் ஒரு நண்பனின் வாழ்வைக் காப்பாற்றியது. அப்பொழுது மேவிபோசேத் ஆச்சரியப் பட்டு, “ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு முன்பாக என் தகப்பன் வீட்டார் எல்லாரும் சாவுக்கு ஏதுவாயிருந்தார்களே ஒழிய மற்றப் படியல்ல; ஆனாலும் உமது பந்தியிலே சாப்பிடுகிறவர்களோடே உமது அடியேனை வைத்தீர்” (19:28) என்றான். அவன் தாவீதுக்கு உண்மையாய் இருந்தான். தாவீதின் மகனான அப்சலோம் தாவீது அரசனை எருசலேமை விட்டு துரத்திய போதும் இவன் உண்மையாயிருந்தான் (2 சாமு.16:1-4; 19:24-30).

 நீயும் வாழ்க்கை முழுமைக்கும் உண்மையாய் இருக்கும் நண்பனைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்றாயா? ஒரு வித்தியாசமான நபர் உன்னிடமிருந்து, வித்தியாசமான ஒன்றை எதிர் பார்க்கலாம். உன்னுடைய அறிவு ஒருவரைத் தண்டிக்குமாறு கூறலாம், ஆனாலும் இரக்கத்தை தெரிந்து கொள். அவர்களின் பொறுப்பை உணரும்படி செய், தகுதியற்றவர்களாக இருப்பினும், தவறை சரி செய்ய வாய்ப்பளி. இவரை நன்றியும் உண்மையும் உள்ள நண்பனாகக் காணமுடியும். நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்ட இரக்கத்தோடு சிந்தி.