2019 ஆம் ஆண்டு, லியானார்ட் டா வின்சியின் ஐநூறாவது மறைவு தினத்தை நினைவு கூரும் வகையில், உலகளவில் கலை கண்காட்சி நடத்தப்பட்டது. அவர் வரைந்த அநேக படங்களும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள், முழுவதுமாக வரையப்பட்ட ஐந்து படங்கள் தான், டா வின்சிக்கு உலகளவில் பெருமை சேர்த்தது, அதில் கடைசி இராப்போஜனம் படமும் அடங்கும்.

இந்த நுணுக்கமான படத்தில், இயேசு தன்னுடைய சீடர்களோடு கடைசி உணவைச் சாப்பிட்ட காட்சி, யோவான் சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி காட்டப்பட்டுள்ளது. இயேசு தன்னுடைய சீஷர்களிடம், “உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்” (யோவா.13:21) என்று கூறிய போது, சீஷர்கள் குழப்பமடைந்த காட்சியை இந்த படம் சித்தரிக்கின்றது. கலக்கமடைந்த சீஷர்கள், காட்டிக் கொடுப்பவன் யார் என்று தங்களுக்குள்ளே விவாதித்தனர், அச்சமயம், யூதாஸ் தன்னந்தனியாக அந்த இரவில், தன்னுடைய போதகரும், நண்பருமான இயேசுவின் நடவடிக்கைகளைக் குறித்து, அதிகாரிகளுக்குச் சொல்லும்படி வெளியேறினான்.

காட்டிக் கொடுத்தான். யூதாஸ் இழைத்த துரோகத்தின் வேதனையை இயேசுவின் வார்த்தைகளில் காணலாம். “என்னுடனே அப்பம் புசிக்கிறவன், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்” (வ.18) என்றார். ஒரு நண்பன், தன்னோடு சாப்பிடும் அளவுக்கு நெருக்கமானவன், அந்த நெருங்கிய உறவை, இயேசுவுக்கு தீங்கு இழைக்க பயன்படுத்திக் கொண்டான்.

ஒரு நண்பனின் துரோகத்தை நாம் அனைவருமே அநுபவித்திருக்கலாம். இத்தகைய வேதனையின் போது, நாம் எவ்வாறு செயல் படுவோம்?  இயேசு தனக்கு துரோகம் செய்தவன், தன்னோடு அப்பம் புசித்தவன் (யோவா.13:18) என்பதைக் குறிப்பிட, சங்கீதம் 41:9 ல் கூறப்பட்டுள்ளதை எடுத்துக் கூறுகின்றார். நமக்கு நம்பிக்கை தருகின்றார் தன்னுடைய உற்ற நண்பன் செய்த வஞ்சகச் செயலால், வேதனையுற்ற தாவீது, தேவன் தன் மீது பிரியமாய் இருக்கிறார், என்றென்றைக்கும் அவருடைய சமுகத்தில் நிலை நிறுத்துவார் என்பதால் ஆறுதல் அடைகின்றார் (சங்.41:11-12).

நண்பர்கள் நம்மை ஏமாற்றும் போது, தேவனுடைய அன்பு நம்மைத் தாங்குகின்றது, அவருடைய வல்லமையான பிரசன்னம்         நம்மோடிருந்து, அழிவுக்குள்ளாக்கும் வேதனைகளையும் தாங்கிக் கொள்ள நமக்கு பெலனளிக்கும்.