சந்ததியினருக்கு கடத்தப்படும் அன்பு
என்னுடைய மகள், நான்சி டிரூவின் துப்பறியும் கதைகள் மீது அதிக ஆவல் கொண்டிருந்தாள். கடந்த மூன்று வாரங்களில், அவள், ஸ்லூயத் என்ற பெண்ணை பற்றிவரும், கிட்டத்தட்ட 12 புத்தகங்களை வாசித்தாள். அவளுடைய துப்பறியும் கதைகள் மீது அதிக ஆவல் கொண்டாள். நானும் குழந்தையாக இருந்த போது இத்தகைய புத்தகங்களின் மீது ஆவல் கொண்டிருந்தேன். 1960 களில் என்னுடைய அம்மா வாசித்த, நீல அட்டைகொண்ட இந்த புத்தங்கள், அவளுடைய அலமாரியில் இன்னமும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த பாசம் சந்ததிகளுக்கும் கடந்து வருவது, வேறென்ன காரியங்களை நான் கடந்து வரச் செய்கின்றேன் என்பதைச் சிந்திக்கச் செய்தது. தீமோத்தேயுவுக்கு இரண்டாம் நிருபத்தை எழுதும் போது பவுல், அவனுடைய பாட்டி மற்றும் தாயாரின் “மாயமற்ற விசுவாசத்தைப்” பற்றி நினைக்கின்றார். இந்த மர்மக் கதைகளின் மீது அவளுக்கு இருக்கின்ற ஆவலோடு, அவளுடைய பாட்டியும் தாத்தாவும் கொண்டிருந்த விசுவாசத்தையும் ஊழியத்தையும் பற்றிக் கொண்டு, ஜெபத்திலும் “கிறிஸ்து இயேசுவினால் உண்டாயிருக்கிற ஜீவனைப் பற்றிய வாக்குத் தத்தத்தினையும்” (1 தீமோ.1:1) பற்றிக் கொள்வாள்.
பாட்டியும் தாத்தாவும் இல்லாதவர்களும் இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையோடு இருப்பதையும் காணமுடிகின்றது. தீமோத்தேயுவின் தந்தையைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், பவுல் அவனை “பிரியமுள்ள குமாரன்” (வ.2) என்று குறிப்பிடுகின்றார். விசுவாசத்தைக் கொடுப்பதற்கு குடும்பம் இல்லாதவர்களுக்கு, பெற்றோரும் பாட்டிகளும் தாத்தாக்களுமாக இருந்து, அவர்களைப் பரிசுத்தமாக வாழ அழைக்கும் (வ.9) நபர்களையும் ஆலயத்தில் காண்கின்றோம். தேவன் நமக்கு ஈவாக கொடுத்துள்ள பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியை (வ.7) நாம் அணைத்துக் கொள்வோம். உண்மையில் நாம் ஓர் அழகிய பாரம்பரியத்தைப் பெற்றுள்ளோம்.
மீண்டும் துடி
2012 ஆம் ஆண்டு, அமெரிக்கன் இசைக் குழுவினர் “Tell Your Heart to Beat Again”( உன்னுடைய இருதயத்தை மீண்டும் துடிக்கச் சொல்) என்ற ஒரு புதிய பாடலை வெளியிட்டனர். இந்தப் பாடல் ஓர் இருதய மருத்துவரின் உண்மைக் கதையின் அடிப்படையில் எழுதப்பட்டது. ஒரு நோயாளியின் இருதயத்தைச் சரிசெய்யும்படி, அதனை, அறுவை சிகிச்சை மூலம் நீக்கின மருத்துவர், அதைச் சரிசெய்தபின்னர், அதனை, அதனுடைய இடத்தில் நெஞ்சில் பொருத்தினார், மெதுவாக அதனை அமுக்கி செயல்படுத்த முயற்சித்தார். ஆனால் அந்த இருதயம் செயல்படவில்லை. கடுமையான முயற்சிகளை எடுத்தும் ஒன்றும் பலனளிக்கவில்லை. கடைசியாக, அவர் அந்த மயக்க நிலையிலிருந்த நோயாளியின் அருகில் முழங்காலிட்டார், அவளிடம் பேசினார், “ மிஸ்.ஜாண்சன், நான் உன்னுடைய மருத்துவர் பேசுகின்றேன், இந்த அறுவை சிகிச்சை நன்றாக முடிந்து விட்டது, உன்னுடைய இருதயம் சரிசெய்யப் பட்டது, இப்பொழுது உன்னுடைய இருதயத்தை மீண்டும் துடிக்கச் சொல்” என்றார். அவளுடைய இருதயம் துடிக்க ஆரம்பித்தது.
நம்முடைய இருதயத்திற்கு கட்டளை கொடுக்க முடியும் என்ற எண்ணம் சற்று வினோதமாக காணப்படலாம், ஆனால் அது ஆவியோடு இணைக்கப்பட்டுள்ளது. “என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்?......தேவனை நோக்கிக் காத்திரு” (சங். 42:5) என்று சங்கீதக் காரன் தனக்குள்ளாக கேட்கின்றான். மற்றொரு இடத்தில், “என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பறுதலுக்குத் திரும்பு” (116:7) என்கின்றார். யுத்தத்தில் இஸ்ரவேலரின் எதிரிகளை தோற்கடித்தபின்னர், நியாயாதிபதியான தெபோராள், யுத்த வேளையில், அவளும் தன்னுடைய இருதயத்தோடு பேசியதாக வெளிப்படுத்துகின்றாள். “என் ஆத்துமாவே, நீ பலவான்களை மிதித்தாய்” (நியா.5:21) என்று தன்னுடைய இருதயத்தை திடப்படுத்தினாள், ஏனெனில் தேவன் அவளுக்கு வெற்றியைக் கட்டளையிட்டார் (4:6-7).
நம்முடைய வல்லமையான மருத்துவராகிய தேவன், நம்முடைய இருதயத்தையும் திருப்புகின்றார் (சங்.103:3). பயம், மன அழுத்தம் அல்லது குற்ற உணர்வு நம்முடைய இருதயத்தினுள் வரும் போது, நாமும் நம் ஆத்துமாவை நோக்கி, தைரியமாக இரு, வலிமை இழந்த இருதயமே, மீண்டும் துடி என்று சொல்வோமாக.
ஆழ்ந்த விசுவாசம்
அநேக மரங்கள் 500 ஆண்டுகளையும் அதற்கும் மேலாகவும் தாண்டி வாழ்கின்றன. ஆரம்பத்தில் அவற்றின் வளைந்த கிளைகள் உயரமாகவும் படர்ந்தும் காணப்படும். அவற்றின் இலைகளுக்கு ஊடாக குளிர்ந்த காற்று வீசும், சூரிய கதிர் அந்த இடைவெளியில் ஊடுருவி, மரத்தின் அடியில், அசைந்தாடும் நிழலைத் தோற்றுவிக்கும். தரைக்கு அடியில்தான் மிகவும் விரிவடைந்த வேர்த் தொகுதி காணப்படுகின்றது. இது, மரத்திலிருந்து செங்குத்தாக கீழ் நோக்கி வளர்ந்து, தான் சார்ந்து வாழக் கூடிய ஊட்டச்சத்தைத் தேடுகின்றது. அந்த ஆணிவேரிலிருந்து ஏராளமான கிளைவேர்கள் தோன்றி, கிடைமட்டமாக பரவுகின்றது. இவை மரத்திற்குத் தேவையான நீர் சத்தையும் ஊட்டத்தையும் வாழ் நாள் முழுவதும் கொடுக்கின்றன. இந்த வலைப் பின்னல் போன்ற வேர்த் தோகுதி, மரத்தைக் காட்டிலும் அதிகமாக வளர்ந்து, மரத்தைத் தாங்கிப் பிடிப்பதோடு, அதன் தண்டு தொகுதியை உறுதியாக நிறுத்தும் நங்கூரம் போல செயல் படுகின்றது.
இந்த பிரமாண்டமான மரத்தைப் போல, நமக்கு வாழ்வு தரும் வளர்ச்சி மேற்புறதிற்கு உள்ளே நடைபெறுகின்றது. இயேசு விதைப்பவன் உவமையை தன்னுடைய சீஷர்களுக்கு விளக்கிய போது, நாம் ஒவ்வொருவரும் பிதாவோடு, தனிப்பட்ட முறையில் உறுதியாக நிலைத்திருக்கும் உறவைப் பெற்றிருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றார். நாம் வேதாகமத்தின் மூலம், தேவனைக் குறித்த அறிவில் வளரும் போது, நம்முடைய விசுவாச வேர்களை பரிசுத்த ஆவியானவர் தாங்கிப் பிடிப்பார். மாறுகின்ற சூழலைக் கொண்டுள்ள வாழ்வில் சோதனைகளோ, துன்பங்களோ, கவலையோ எது வந்த போதும், அவரைப் பின்பற்றுகின்றவர்கள் தப்பிப் பிழைப்பதற்கு தேவன் உதவி செய்கின்றவராய் இருக்கின்றார் (மத்.13:18-23).
நம்முடைய அன்புத் தந்தை அவருடைய வார்த்தைகளால் நம்முடைய இருதயத்தை பெலப்படுத்துகின்றார். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய குணத்தை மாற்றுகின்றார். நம்முடைய ஆழ்ந்த வேர் கொண்ட விசுவாசம், நம்மில் கனிகளை உருவாக்கும், இதனை நம்மைச் சுற்றிலும் இருப்பவகள் காண்பர்.
கடனை நீக்குபவர்
அமெரிக்காவிலுள்ள ஒரு பல்கலைகழகத்தில், பட்டமளிப்பு விழா நடைபெற்ற போது, அங்கிருந்த மொத்த கூட்டமும் தெரிவித்த பதிலை அதிர்ந்தது என்ற ஒரே வார்த்தையால் வெளிப்படுத்தலாம். அந்த பட்டமளிப்பு விழாவின் துவக்க பேச்சாளர், பட்டம் பெறும் அந்த வகுப்பிலுள்ள அனைத்து மாணவரின் கடன்களை, லட்சக்கணக்கான டாலர்களைத் தள்ளுபடி செய்ய, தானும் தன்னுடைய குடும்பத்தினரும் சேர்ந்து, அதனை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார். மகிழ்ச்சியில் மூழ்கி, கண்ணீரோடும், ஆரவாரத்தோடும் தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்த கூட்டத்தில், ஒரு லட்சம் டாலர்கள் (72 லட்சம் ரூபாய்) கடன் வைத்திருந்த ஒரு மாணவனும் இருந்தான்.
“உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாக” இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்தின பின்பு, யோவான், அவர் நிறைவேற்றின கடன் தள்ளுபடி வேலையைப் பற்றி எழுதுகின்றார். “நம்மிடத்தில் அன்பு கூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவினவரை” ஆராதிக்கின்றார் (வெளி. 1:6). இந்த வார்த்தைகள் மிக எளிமையாக இருந்தாலும், அதன் அர்த்தம் மிக ஆழமானது. மோர்ஹவுஸ்ஸில் பட்டம் பெற்ற மாணவர்கள் கேட்ட நற்செய்தியைக் காட்டிலும் சிறந்த செய்தி, இயேசு கிறிஸ்துவின் மரணத்தினால் (சிலுவையில் சிந்தின இரத்தத்தினால்), நம்முடைய பாவச் செயல்களுக்கும், பாவ ஆசைகளுக்கும், பாவ உணர்வுகளுக்கும் உள்ள தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டு நம்மை அவர் விடுவித்தார். நம்மீது இருந்த கடன் தீர்ந்த்தால், யாரெல்லாம் இயேசுவை விசுவாசிக்கின்றார்களோ அவர்களின் பாவமெல்லாம் மன்னிக்கப் பட்டு, தேவனுடைய இராஜியத்தின் குடும்பத்தில் நாம் இணைகின்றோம். இந்த நற்செய்தி தான், எல்லா நற்செய்திகளிலும் மிகச் சிறந்தது!