இந்த மனிதன் விடுவிக்கப் பட கூடாதவனாக காணப்படுகின்றான். அவனது குற்றப் பட்டியலில், எட்டு முறை துப்பாக்கி சுடுதல்(ஆறு பேர் கொல்லப்பட்டனர்) 1970 ஆம் ஆண்டு நியுயார்க் பட்டணத்தை அச்சுறுத்தும் வகையில் ஏறத்தாள 1500 நெருப்புகளை ஏற்படுத்தினான். அவனுடைய குற்றச்செயல் நடைபெறும் இடத்தில் காவல் துறையை திட்டி கடிதங்களை வைத்தான். ஆனால், ஒரு நாள் பிடிபட்டான். அவன் செய்த ஒவ்வொரு கொலைக்கும் தொடர்ந்து சிறைத்தண்டனை வழங்கப்பட்டு ஆயுள் கைதியானான்.
ஆனாலும், தேவன் இந்த மனிதனுக்கு இரங்கினார். இன்று இவன் கிறிஸ்துவின் விசுவாசி, அனுதினமும் தேவனுடைய வார்த்தைகளில் நேரத்தைச் செலவிடுகிறான். தன்னால் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தான், அவர்களுக்காக ஜெபிக்கின்றான். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இந்த மனிதன் மீட்கப்பட வாய்ப்பேயில்லை என்றிருந்த போதும், அவன் தேவனிடத்தில் நம்பிக்கையைப் பெற்றான். அவன், “என்னுடைய விடுதலையை இயேசு என்ற ஒரே ஒரு வார்த்தையில் பெற்றேன்” என்றான்.
மீட்பு என்பது தேவனுடைய அற்புத செயல். சில கதைகள் இன்னும் வினோதமாக இருக்கின்றது. ஆனால் எல்லாவற்றிலும் உள்ள அடிப்படை உண்மை ஒன்றுதான். இயேசு வல்லமையுள்ள இரட்சகர்! அவருடைய மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள நாம் ஒருவருமே தகுதியானவர்கள் அல்ல. அவர், “தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களை……….முற்று முடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்” (எபி.7:25).
அன்புள்ள இயேசுவே, எங்களை அதிகமாய் நேசித்து, எங்களுக்காக மரித்து, எங்களை மீண்டும் உம்மோடுள்ள உறவில் சேர்த்துக் கொண்டமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றேன்.