ஓர் இளைஞன், அவனுடைய விளையாட்டு குழுவின் தலைவனானான். விளையாட்டை தன்னுடைய தொழிலாகக் கொண்டிருந்த இக்குழு, முகச்சவரம் கூட செய்யத்தேவையில்லாத, சிறிதளவே பண்பட்ட இளைஞனால் வழி நடத்தப்படுகின்றது. அவன் முதல் முறையாகப் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த போது, அது வரவேற்கத்தகுந்ததாக இல்லை. அவன் தன்னுடைய பயிற்சியாளரைச் சந்திப்பதையும், தன்னுடைய குழுவினரைச் சந்திப்பதையும் தள்ளிப் போட்டான், கருத்துக் கணிப்புகளைக் கூறுவதற்கு தயங்கினான், தன்னுடைய வேலையைச் செய்யும் போது முணுமுணுத்தான்.அந்த நாட்களில் அவனுடைய குழு பின்னடைதலைச் சந்தித்தது, கடைசியில் அந்த இளைஞன் விளையாட்டை வியாபாரமாக்கினான். அவன் தன்னுடைய குழுவை வழி நடத்தக்கூடிய அதிகாரம் தனக்கு இருக்கிறது என்பதையே புரிந்துகொள்ளவில்லை அல்லது அவன் தன்னால் முடியும் என்பதை நம்பவில்லை.
தன்னுடைய வாழ்வில் தோல்விகளைச் சந்தித்த சவுல், “தன்னுடைய கண்களுக்கு மிகவும் சிறியவனாக” ( 1 சாமு. 15:17) காணப்பட்டான். தன்னுடைய கூட்டத்தினர் அனைவரையும் காட்டிலும் மிக உயரமானவன் என்று வர்ணிக்கப்படும் ஒருவன் இப்படிச் சொல்வது வேடிக்கையாக உள்ளது. எல்லா ஜனங்களும் அவனுடைய தோளுக்குக் கீழாயிருந்தார்கள் (9:2). ஆனால், அவனோ தன்னை அவ்வாறு பார்க்கவில்லை. தனக்கு கீழேயுள்ள ஜனங்களின் சொற்படி நடப்பவனாக காணப்படுகின்றான் என்பதை இந்த அதிகாரத்தில் காண்கின்றோம். ஜனங்களல்ல, தேவன் அவனுக்கு இந்த பணியைக் கொடுத்தார் என்பதை அவன் புரிந்து கொள்ளவில்லை.
ஒவ்வொரு தனி மனிதனுடைய தோல்விக்கும் காரணமென்ன என்பதை சவுலின் இக்காரியம் காட்டுகின்றது. நாம் தேவனுடைய சாயலில், அவருடைய அரசாட்சியை வெளிக்காட்டும்படி உருவாக்கப் பட்டோம் என்பதைக் காணத்தவறிவிடுகின்றோம், கடைசியில், நம்முடைய அதிகாரத்தை தவறாக பயன் படுத்தி, உலகில் அழிவை கொண்டுவருகின்றவர்களாக இருக்கின்றோம். இதனைச் சரிசெய்ய நாம்தேவனிடத்திற்குத் திரும்புவோம், நம்முடைய பிதா தமது அன்பினால் நம்மை மாற்றுவார், அவர் நம்மை தமது ஆவியினால் நிரப்புவார், இயேசு நம்மை இவ்வுலகினுள் நடத்துவார்.
அன்புள்ள தேவனே, நீர் என்னைக் காண்பது போல நானும் என்னைக் காணக் கூடிய கண்களை எனக்குத் தாரும். நீர் என்னை அழைத்ததின் நோக்கத்தை நிறைவேற்ற தேவையான கிருபையை எனக்குத் தந்தருளும்.