எதிர்பாராத வகையில், அமெரிக்கப் படைகள் சரண் அடைந்த போது, அமெரிக்க புரட்சி முடிவுக்கு வந்தது. அநேக அரசியல்வாதிகளும் இராணுவ அதிகாரிகளும் ஜெனரல் ஜியாஜ் வாஷிங்டனை புதிய தலைவராக்க திறமையான முயற்சிகள் எடுத்தனர். முழு அதிகாரமும் அவருடைய கரத்தில் இருக்கும் போது, அவர் தன்னுடைய குறிக்கோளான சுதந்திரத்தையும் விடுதலையும் பற்றி உறுதியாக நிற்பாரா என்ற எதிர்பார்ப்போடு, உலகமே அவரை கவனித்துக் கொண்டிருந்தது. இங்கிலாந்தின் அரசர் ஜியார்ஜ் 111, ஓர் உண்மையைக் கண்டார், தன்னை இழுக்கின்ற விசையை எதிர்த்து, வெர்ஜீனியாவிலுள்ள தன்னுடைய பண்ணைக்குச் சென்று விட்டார் என்பதைக் கண்ட உலகு அவரை “ உலகிலேயே மிகப் பெரிய மனிதன்” என்று அழைத்தது. வலிமையான பதவி ஆசையை எதிர்த்து தள்ளியது, அவருடைய பெருந்தன்மையையும் முக்கியத்துவத்தையும் கட்டுகிறது என்பதை ஜியார்ஜ் அரசர் புரிந்துகொண்டார்.
இந்த உண்மையை அறிந்த பவுல், நம்மையும் கிறிஸ்துவின் தாழ்மையைப் பின்பற்றுமாறு ஊக்கப் படுத்துகின்றார். “இயேசு கிறிஸ்து தேவனுடைய ரூபமாயிருந்தும்” அவர் “தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்” (பிலி.2:6), தன்னுடைய அதிகாரத்தையெல்லாம் கொடுத்து விட்டு, “அடிமையின் ரூபமெடுத்து” “சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத் தாமே தாழ்த்தினார் (வ.7-8). சகல அதிகாரத்தையும் உடையவர், சகலத்தையும் நம் மீதுள்ள அன்பின் நிமித்தம் விட்டுக் கொடுத்தார்.
ஆனால், நேர்மாறாக, தேவன் கிறிஸ்துவை ஒரு குற்றவாளியின் சிலுவையிலிருந்து, “எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார்” (வ.9). நாம் இயேசுவைப் போற்றுபடியும், நாம் அவருக்கு கீழ்ப்படியும், அவர் நம்மைக் கட்டாயப் படுத்தாமல் தன்னுடைய அதிகாரம் அனைத்தையும் விட்டு, நம்மை பிரம்மிக்கச் செய்யும் ஒரு செயலின் மூலம் நம்முடைய ஆராதனையும் அற்பணிப்பையும் ஜெயித்துவிட்டார். தம்மை முழுமையாக தாழ்த்தினதின் மூலம், இயேசு தன்னுடைய உண்மையான மேன்மையை நமக்குக் காட்டி, இவ்வுலகையே தலை கீழாக மாற்றினார்.
இயேசு கிறிஸ்துவின் தாழ்மையின் ஆழம் உன்னை எவ்வாறு ஆச்சரியப் படுத்துகின்றது? அவருடைய தாழ்மையை பார்த்தபின்பு, எதன் அடிப்படையில் ஒருவருடைய பெருந்தன்மையை மதிப்பிடப் போகின்றாய்?
தேவனே, உம்முடைய கைவிடப்பட்ட நிலையிலும், அவமானத்தின் மத்தியிலும் உம்முடைய உண்மையான வல்லமையையும் பெருந்தன்மையையும் வெளிப்படுத்தினபடியால் உமக்கு நன்றி கூறுகின்றேன்.