அறிஞர் கென்னெத் பெய்லி, சாக்கி மாமாவை ஒரு நண்பனையும் விட மேலாகக் கருதினார். மிகப் பரந்த சகாரா பாலைவனத்துக்குள் சவாலான சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் போது, சாக்கி மாமாவைத் தான், அவருடைய நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாகக் கருதினார். சாக்கி மாமாவைப் பின் தொடரும் பெய்லியும், அவருடைய குழுவினரும் தங்களுடைய முழு நம்பிக்கையையும் அவர் மீது வைத்தனர். மொத்தத்தில், “நாங்கள் செல்கின்ற இடத்தின் வழியை நாங்கள் அறியோம், எங்களை வழிதவறச் செய்தால், நாங்கள் அனைவரும் மரித்துப் போவோம். நாங்கள் எங்களது முழு நம்பிக்கையையும் உங்களின் தலைமையில் வைத்துள்ளோம்” என்று அவர்கள் உறுதியாகக் கூறினர்.

சோர்ந்து, இருதய வேதனையோடு இருந்த ஒரு வேளையில், தாவீது மனித வழி நடத்துதலையெல்லாம் தாண்டி, தான் பணிசெய்கின்ற தேவனுடைய வழி நடத்துதலைத் தேடுகின்றார். சங்கீதம் 61:2 ல், “என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்” என்கின்றார். தேவனுடைய பிரசன்னத்தின் மறைவில் தன்னைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படி அவர் ஏங்குகின்றார் (வ.2-4).

வேதாகமம் விளக்குவது போல, “வழிதப்பிப் போன” ஆடுகளைப் போல காணப்படும் மக்களின் வாழ்க்கையில் தேவனுடைய வழி நடத்துதல் மிக அவசியம் (ஏசா.53:6). நாம் நம்முடைய சொந்த வழியில் நடந்தால், உடைந்து போன உலகமாகிய இந்த வனாந்தரத்தில் நம்பிக்கையை இழந்து தொலைந்து போவோம்.

ஆனால், நாம் தனித்து விடப்படவில்லை! நம்மை வழி நடத்த ஒரு மேய்ப்பன் உள்ளார், அவர் நம்மை “அமர்ந்த தண்ணீர்கள்” அண்டையில் கொண்டு போய், ஆத்துமாவைத் தேற்றி, நீதியின் பாதையில் வழி நடத்துகின்றார் (சங்.23:2-3).

தேவனுடைய வழி நடத்துதல் உனக்கு எங்கு தேவைப் படுகின்றது?  அவரை நோக்கிக் கூப்பிடு, அவர் உன்னை ஒரு போதும் விட்டு விலக மாட்டார்.