தனிமை என்ற உணர்வு, நம்முடைய நலமான உணர்வுகளை அச்சுறுத்தக் கூடிய மிகப் பெரிய தீமையாகும். இது, சமுதாய ஊடகங்களில் நம்முடைய நடத்தை, நாம் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் இது போன்றவற்றைப் பாதிப்பதின் மூலம் நம் உடல் நலத்தைப் பாதிக்கின்றது. உலக மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பேர், வயது, பாலினத்தைச் சாராமல், ஏதாவது சில நேரங்களிலாவது தனிமையை உணர்கின்றனர். பிரிட்டனிலுள்ள ஒரு பெரிய அங்காடியில் “பேசும் மேசைகளை”, அவர்களின் சிற்றுண்டிச் சாலைகளில், மக்களிடையே உறவுகளை ஏற்படுத்தும் நோக்குடன் உருவாக்கியுள்ளனர். மனிதர்களோடு உறவாட விரும்புகின்றவர்கள், இத்தகைய நோக்கோடு அமைக்கப்பட்டுள்ள  மேசைகளில் அமர்ந்திருப்பவரோடு இணைந்து கொள்வர் அல்லது அங்கு அமர்வதன் மூலம், தங்களின் விருப்பத்தை மற்றவர்களுக்குத் தெரிவிப்பர். உரையாடல்கள், அவர்களுக்கு மற்றவர்களோடு தொடர்பையும் சமுதாய உணர்வையும் தருகின்றது.

ஆதி திருச்சபைகள், மக்களுக்கு பிறரோடு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. விசுவாச வாழ்க்கையைப் புதியதாகப் பார்க்கும் உலகில், ஒருவரோடொருவர் தொடர்பற்று வாழும் போது, தங்களின் விசுவாச வாழ்க்கையில் ஒரு தனிமையை உணர்கின்றனர். “அவர்கள் அபோஸ்தலருடைய உபதேசத்திலும்” பங்கு பெற்று, இயேசுவைப் பின்பற்ற தேவையான காரியங்களைக் கற்றுக் கொண்டனர், அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அனுதினமும் தரித்திரு     ந்து, வீடுகள் தோறும் அப்பம் பிட்டு” ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தி, ஐக்கியத்தில் நிலைத்திருந்தார்கள் (அப். 2:42,46).

நம் அனைவருக்குமே மனிதர்களின் தொடர்பு தேவை. தேவன் அதற்கென்றே நம்மை உருவாக்கினார்! வேதனை நிறைந்த தனிமை, நம்மைத் இத்தேவைக்கு நேராக வழிநடத்துகின்றது. ஆதி திருச்சபை மக்களைப் போல நாமும் நல்லெண்ணமுடன், மனித தோழமையை ஏற்படுத்துவோம், இத்தேவையோடு இருக்கும் நம் சுற்றத்தாருக்கும் வழங்குவோம்.