முன்னொரு காலத்தில் என்ற வார்த்தைகள் மிகவும் வல்லமை வாய்ந்தவையாக உலகெங்கிலும் திகழ்கின்றது. இந்த வார்த்தைகளின் வலிமையில் இருந்த வேறுபாடுகள் என்னுடைய இளமைப் பருவ நினைவில் இருக்கின்றது. ஒரு நாள் என்னுடைய தாயார் வீட்டிற்கு வந்தபோது, ஒரு பெரிய, கடின அட்டை கொண்ட, படங்களோடு கூடிய வேதாகம கதை புத்தகத்தைக் கொண்டு வந்தார்- நல்மேய்ப்பன் வேதாகம கதை புத்தகம் அது. ஒவ்வொரு நாள் இரவும் தூங்குவதற்கு முன்பு, நானும் என்னுடைய சகோதரனும் எதிர்பார்ப்போடு அமர்ந்திருப்போம். எங்கள் தாயார் முன்னொரு காலத்தில், தேவன் நேசித்த மக்களைப் பற்றிய ஆர்வமுள்ள கதைகளை வாசித்து, கூறுவார். இந்தக் கதைகள் ஒரு லென்ஸ் போல செயல் பட்டு, இவ்வுலகின் காரியங்களை எப்படிப் பார்க்க வேண்டும் என காட்டுகின்றன.

மறுக்க முடியாத, மிகப் பெரிய கதை சொல்லுபவர் யாரெனில், நசரேயனாகிய இயேசு. நம் ஒவ்வொருவருக்குள்ளும் கதை கேட்கும் ஓர் ஆர்வம் இருப்பதை அவர் அறிவார். எனவே அவர் சுவிசேஷத்தைக் கூற தொடர்ந்து அ     ந்த ஊடகத்தையே பயன்படுத்தினார். முன்னொரு காலத்தில், ஒரு மனிதன் “நிலத்தில் விதைகளை விதைத்தான்” (மாற்.4:26), முன்னொரு காலத்தில் “ஒரு கடுகு விதை” இருந்தது (வச. 31), இன்னும் பல, பல. இயேசு அனுதினமும் மக்களோடு உவமைகளின் வாயிலாகவே உரையாடினார் என்பதை மாற்கு சுவிசேஷம் தெளிவாகக் கூறுகின்றது (வச. 34). இவ்வுலகத்தை தெளிவாகக் காணவும், அவர்களை நேசிக்கின்ற தேவனை நன்கு புரிந்து கொள்ளவும் இது உதவியாக இருந்தது.

தேவனுடைய இரக்கத்தையும், கிருபையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது இதனை நினைவில் கொள்வது புத்திசாலித்தனம். கதைகளைக் கேட்க யாரும் மறுப்பதில்லை.