வாகனங்கள் மெதுவாகச் செல்ல ஆரம்பித்ததால், அந்த சாலையின் மேற்பரப்பை நிரப்புகிறார்கள் என நான் நினைத்தேன், மீண்டும் வேகமாக வேலையை செய்கின்றார்கள். இந்தச் சாலையை முழுமையாக போடும் வேலை ஏன் இன்னமும் செய்யப்படவில்லை? நான் இந்த சாலையில், “சாலை போடும் கம்பெனி, வேலையை முடித்து விட்டார்கள், இந்த நேர்த்தியான சாலையை அநுபவிக்கவும்” என்பதாகக் கூறும் ஓர் அறிவிப்பை நான் இதுவரையில் பார்த்ததேயில்லை.
இது போன்ற காரியம், என்னுடைய ஆவிக்குரிய வாழ்விலும் உண்மையானது. என்னுடைய விசுவாசத்தின் ஆரம்ப நாட்களில், நான் முதிர்ச்சி நிலையை எட்டி விட்டதாக நினைத்தேன், ஆனால் நான், “மேற்பரப்பில் சமமாக்கப் பட்டிருந்தேன்”. முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், “நான் இன்னமும் கட்டுமானத்தில் உள்ளேன்” என அறிக்கையிட்டேன். குழிகள் நிறைந்த அந்த சாலையைப் போல, என்னுடைய விசுவாச வாழ்வும் ஒரு போதும் முடிக்கப்பட்ட நிலையை எட்டவில்லை. சில வேளைகளில் அது என்னை எரிச்சல் அடையச் செய்தது.
எபிரெயர் 10ஆம் அதிகாரத்தில், நம்மை ஆச்சரியப் படுத்தும் வாக்குத்தத்தம் உள்ளது. வசனம் 14ல், “ஏனெனில், பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப் படுத்தியிருக்கிறார்” என்பதாகக் காண்கின்றோம். இயேசு சிலுவையில் நிறைவேற்றிய வேலை நம்மை இரட்சித்தது, முழுமையாக, நேர்த்தியாக நிறைவேற்றியது. தேவனுடைய பார்வையில் நாம் முழுமையாக கட்டப்பட்டு விட்டோம், ஆனால் நாம் புவியில் இருக்கும் வரை இந்த கட்டுமான வேலை முழுமையடையாது, நாம் அவரை போன்று மாறும்படி உருவாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம், ”நாம் இன்னும் பரிசுத்தமாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம்”.
ஒரு நாள், நாம் அவரை நேருக்கு நேர் சந்திப்போம், நாமும் அவரை போல இருப்போம் (1 யோவா. 3:2). அதுவரையிலும் நாம் “கட்டுமானத்தில் உள்ளோம்” நம்மில் நடைபெறும் வேலை உண்மையாக நிறைவடையும் போது, நாமும் அந்த மகிமையின் நாளை ஆவலோடு எதிர்பார்ப்பவர்களாவோம்.
உன்னுடைய ஆவிக்குரிய வளர்ச்சி நீ எதிர்பார்ப்பதை விட மெதுவாக இருப்பதால், எப்பொழுதாகிலும் விரக்தியடைந்துள்ளாயா? எபிரெயரில் உள்ள இப்பகுதி, உன்னுடைய ஆவிக்குரிய வளர்ச்சியைப் பற்றி ஊக்கத்தைக் கொடுக்கின்றதா?
உண்மையுள்ள தேவனே, என்னுடைய ஆவிக்குரிய வளர்ச்சி மெதுவாக உள்ளதால், நான் சில வேளைகளில் விரக்தியடைகிறேன். நீர் என்னுடைய வாழ்வில் இன்னமும் கிரியை செய்து, என்னை உம்மைபோல மாற்றிக் கொண்டிருக்கிறீர் என்பதை நினைவில் கொள்ள உதவியருளும்.