கென்யா தேசத்திலுள்ள நைரோபியின் சேரிப் பகுதிக்கு நானும் எனது நண்பனும், எங்களது வாகனத்தில் சென்றிருந்த போது, அங்குள்ளவர்களின் வறுமையைப் பார்த்த, எங்களது இருதயம் வெகுவாக தாழ்த்தப்பட்டது. அதே நேரத்தில், அங்குள்ள சிறு பிள்ளைகள் சத்தமாக, “போதகர், போதகர்!” என்று கூப்பிட்டுக் கொண்டு ஓடி வருவதைப் பார்த்தபோது, வேறுவகையான உணர்வுகள், தூய்மையான நீரைப் போன்று எங்களின் இருதயத்திலிருந்து பொங்கி எழுந்தது. அவர்களுடைய ஆவிக்குரிய வழிகாட்டியை எங்களது வாகனத்தில் பார்த்த அவர்களின் மகிழ்ச்சி ததும்பிய வரவேற்பு இவ்வாறு இருந்தது. தங்களின் மென்மையான சத்தத்தோடு, சிறுவர்கள் தங்கள் மீது கரிசனை கொண்டு பாதுகாத்து வரும் ஒருவரை வரவேற்றனர்.
இயேசு கழுதையின் மீது ஏறி எருசலேமுக்கு வந்த போது, அவரை வரவேற்ற கூட்டத்தினரோடு, அநேக குழந்தைகள் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டனர். “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” (மத்.21:9, 15) என்று ஆர்ப்பரித்தனர், அவர்கள் இயேசுவை ஸ்தோத்திரித்து ஆர்ப்பரித்த சத்தம் மட்டுமல்ல, இயேசு, அவ்விடத்திலிருந்து துரத்தி விட்ட வியாபாரிகள் மற்றும் விலங்குகள் நடந்து செல்லும் சத்தமும் அவ்விடத்தை நிரப்பியது (வச. 12-13). மேலும் அவருடைய இரக்கத்தின் கிரியைகளை நேரில் கண்ட மதத் தலைவர்கள் “கோபமடைந்தனர்” (வச. 14-15). குழந்தைகள் இயேசுவைப் போற்றி பாடுவதைக் கேட்ட அவர்கள் எரிச்சல் அடைந்து, கத்துகின்றனர், (வச. 16), ஜீவன் இல்லாத தங்களுடைய இருதயத்தின் ஏழ்மை நிலையை வெளிக்காட்டினர்.
இயேசுவை இவ்வுலகின் இரட்சகராக அறி ந்து கொண்ட எல்லா இடத்திலும் உள்ள குழந்தைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இயேசு ஒருவரே நம்முடைய துதியையும் அழுகையையும் கேட்பவர், அவரே நம்மைப் பாதுகாப்பவர், ஒரு குழந்தையைப் போன்று, நம்பிக்கையோடு நாம் அவரிடம் வரும் போது, அவர் நம்மை மீட்டுக் கொள்வார்.
கடந்த ஆண்டுகளில் இயேசுவை நீ எவ்வாறு பார்க்கின்றாய்? இயேசுவை தேவக்குமாரன், உன்னை இரட்சிக்கும் படி வந்தவர் என்பதாக காணத் தடையாக இருப்பவை யாவை?
இயேசுவே, நீரே என் இரட்சகர், என் தேவன் என்பதைக் காணும் படி எனக்கு உதவியருளும்.