மேத்யூ கடுமையான தலை வலியினால் விழித்துக் கொண்டான், இது ஒரு வகை ஒற்றைத் தலைவலியாக இருக்கும் என எண்ணினான். ஆனால் அவன் படுக்கையை விட்டு எழுந்ததும் தரையில் சரிந்தான். அவன் ஒரு மருத்துவ மனையில் சேர்க்கப் பட்ட போது, மருத்துவர்கள் அவனை பக்க வாதம் தாக்கி இருக்கிறது என்றனர், மறுவாழ்வு மையத்தில் நான்கு மாதங்கள் சிகிச்சை பெற்றபின்பு, அவர் சிந்திக்கும் மற்றும் பேசும் ஆற்றலைத் திரும்பப் பெற்றார், ஆனால் மூட்டு வலியோடு தான் நடக்க முடிகின்றது. விரக்தியினால் அடிக்கடி பாதிக்கப் பட்டாலும், யோபு புத்தகம் அவருக்கு மிகப் பெரிய ஆறுதலைக் கொடுத்தது.

யோபு தன்னுடைய செல்வம் அனைத்தையும், தன்னுடைய பிள்ளைகளையும் ஒரே நாளில் இழ   ந்தான். இந்த அதிர்ச்சி தரும் செய்திகளின் மத்தியிலும், அவன் முதலாவது தேவனை நம்பிக்கையோடு பார்த்தான், அவரே எல்லாவற்றையும் தந்தவர் என்று அவரைத் துதித்தான். குழப்பத்தின் மத்தியிலும் சர்வ வல்ல தேவனைப் போற்றினான் (யோபு 1:21). அவனுடைய உறுதியான விசுவாசம் நம்மை வியக்கச் செய்கின்றது. ஆனாலும், யோபு விரக்தியோடு போராடினார். அவன் சுகவீனமான போது (2:7) தான் பிறந்த நாளைச் சபித்தான் (3:1). தன்னுடைய வேதனையிலும், அவன் தன் நண்பர்களோடும் தேவனோடும் உண்மையாய் இருந்தான். கடைசியாக, நன்மையும் தீமையும் தேவனுடைய கரத்திலிருந்து வருகின்றது என்பதை ஏற்றுக் கொண்டான் (13:15; 19:25-27).

நம்முடைய வேதனையின் மத்தியில், நாம் நம்பிக்கைக்கும், விரக்திக்கும் இடையேயும், சந்தேகத்திற்கும் விசுவாசத்திற்கும் இடையேயும் ஊசலாடிக் கொண்டிருக்கலாம். நம்முடைய துன்ப நேரத்தில் ஊக்கம் இழந்தவர்களாக அல்ல, நம்முடைய கேள்விகளோடு தேவனிடம் வரும்படி நம்மை அழைக்கின்றார். சில வேளைகளில் நம்முடைய விசுவாசம் குன்றிப் போனாலும், என்றும் உண்மையுள்ள தேவன் பேரில் நம்பிக்கையோடிருப்போம்.