ஒரு சனிக் கிழமை, பிந்திய மதிய வேளையில், அருகில் உள்ள உணவகத்தில் சாப்பிடும்படி குடும்பத்துடன் அமர்ந்தோம். உணவு பரிமாறுபவர் எங்களது மேசையில் உணவுகளை வைத்தபோது, எனது கணவர் நிமிர்ந்து பார்த்து, அவருடைய பெயரைக் கேட்டார். அத்தோடு, “சாப்பிடும் முன்னர் நாங்கள் குடும்பமாக ஜெபிப்பது வழக்கம், இன்று உனக்காக நாங்கள் ஜெபிக்கும்படி ஏதாகிலும் இருக்கிறதா?” எனக் கேட்டார். அவனுடைய பெயரை நாங்கள் இப்பொழுது அறிவோம், சஞ்ஜெய் எங்களை ஆச்சரியத்தோடும், எதிர்பார்ப்போடும் பார்த்தான். சிறிது நேர அமைதிக்குப் பின்னர், அவன் தன்னுடைய நண்பனின் அறையில் தங்கியிருந்து அவனுடைய சோபாவில் தான் ஒவ்வொரு இரவும் தூங்குவதாகவும், அவனுடைய மோட்டார் வாகனம் பழுதடைந்து விட்டதாகவும் கூறி மனமுடைந்து போனான்.
என்னுடைய கணவர், தேவனிடம், சஞ்சைக்குத் தேவையானவற்றைக் கொடுக்குமாறும், அவனுக்கு தேவனுடைய அன்பைக் காட்டுமாறும் ஜெபித்தார். நாம் பரிந்து கேட்கும் ஜெபமும் பரிசுத்த ஆவியானவர் நம்முடைய தேவைகளைத் தெரிந்து கொண்டு, தேவனுக்கு அவற்றைத் தெரியப்படுத்துவதை போல உள்ளது. நம்முடைய மிகப் பெரிய தேவைகளின் போதும், நம்முடைய சொந்த முயற்சியினால் நாம் நம் வாழ்வை கையாள முடியாது என உணரும் போதும், தேவனிடம் என்ன சொல்வது என்று அறியாமல் திகைக்கும் போதும், “ஆவியானவர் தாமே வாக்குக் கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (ரோம. 8:26). ஆவியானவர் என்ன சொல்லுவார் என்பதை நாம் அறியோம், ஆனால் அது தேவன் நம்முடைய வாழ்விற்கு வைத்திருக்கும் சித்தத்தை நிறைவேற்றுவதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அடுத்தமுறை நீ தேவனுடைய வழி நடத்தலுக்காக, தேவைகளுக்காக, ஒருவரின் வாழ்வின் பாதுகாப்பிற்காக ஜெபிக்கும் போது, அ ந்த இரக்கத்தின் செயல் மூலம் உன்னுடைய ஆவிக்குரிய தேவைகள் தேவனிடம் எடுத்துச் செல்லப் படுகின்றன என்பதை தெரிந்து கொள். அவர் உன்னுடைய பெயரை அறிவார், உன்னுடைய பிரச்சனைகளை அவர் பார்த்துக் கொள்வார்.
இன்றைக்கு நீ யாருக்காக ஜெபிக்கப் போகின்றாயா? உன்னுடைய பிரச்சனைகளின் போது பரிசுத்த ஆவியானவர் உனக்காக வேண்டுதல் செய்கின்றார் என்பதை அறிந்த நீ, உன்னுடைய சோதனைகளை எவ்வாறு அணுகப் போகின்றாய்?
இயேசுவே, என்னை உம்மைவிட்டுப் பிரிப்பதற்குச் சோதனைகளுக்கு எந்த அதிகாரமும் இல்லையாதலால் உமக்கு நன்றி கூறுகின்றேன். மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த உம்முடைய வல்லமையினால் இன்று எனக்கு வெற்றியைத் தந்தருளும்.