ஒரு கோடை காலத்தில், என்னால் செய்து முடிக்க முடியாது என்று நான் எண்ணிய ஒருகாரியத்தை செய்து கொண்டிருந்தேன், அது ஓர் எழுதும் வேலை, ஒரு கால வரையரையோடு கூடிய அந்த திட்டத்தை நிறைவேற்ற, அநேக நாட்களைச் செலவிட்டும் அதனை என்னால் முடிக்க முடியவில்லை, நான் மிகவும் சோர்வடைந்ததோடு, உற்சாகத்தையும் இழந்தேன். இத்திட்டத்தைக் கைவிட எண்ணினேன். அப்பொழுது ஒரு ஞானமுள்ள சினேகிதி, “எப்பொழுது கடைசியாக உன்னைப் புதிப்பித்துக் கொண்டாய்? உனக்கு ஓய்வு அவசியம், அத்தோடு ஒரு நல்ல உணவையும் நீ சாப்பிட வேண்டும்” என்றாள்.
அவள் கூறியது சரிதான் என்பதைப் புரிந்து கொண்டேன். அவளுடைய ஆலோசனை, எலியாவைக் குறித்துச் சிந்திக்க வைத்தது. அவன் யேசபேலிடமிருந்து ஒரு பயங்கரமான செய்தியைக் கேள்விப் படுகின்றான்
(1 இரா.19:2). என்னுடைய எழுதும் திட்டம், எலியா தீர்க்கதரிசியின் அநுபவத்திற்கு அருகில் வைத்து ஒப்பிடத்தகுந்தல்ல, கர்மேல் பர்வதத்தில் பொய் தீர்க்கதரிசிகள் அனைவரையும் கொன்று போட்ட போது, யேசபேல் எலியாவிடம் ஆட்களை அனுப்பி, அவனைக் கொன்றுபோடுவதாகச் செய்தி அனுப்புகின்றாள். விரக்தியடைந்த எலியா சாவை விரும்புகின்றான், ஆனால் ஒரு நல்ல தூக்கதிற்கு உள்ளாகின்றான், இரு முறை தேவ தூதன் அவனைத் தட்டி எழுப்பி அவனுக்கு ஆகாரம் கொடுக்கின்றான். தேவன் அவனுடைய சரீரத்தைப் பெலப்படுத்திய பின்பு, அவனுடைய பிரயாணத்தை அவனால் தொடரமுடிந்தது.
“நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்” (வச. 7) ஆக இருக்கலாம், நமக்கு ஓய்வு அவசியமாக இருக்கலாம், நம்மை திருப்தி படுத்தும் சத்தான உணவு தேவைப்படலாம். நாம் களைப்படைந்தவர்களாய், பசியோடு இருக்கும் போது, ஏமாற்றத்திற்கும் பயத்திற்கும் உள்ளாக நேரலாம். ஆனால் இந்த விழுந்து போன உலகத்தில், தேவன், அவருடைய படைப்புகளின் மூலம், நம்முடைய சரீரத் தேவைகளைச் சந்திக்கும் போது, நாமும் அவருக்குப் பணிசெய்யும்படி அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும்.
கடந்த காலத்தில், எப்பொழுது உன்னுடைய வாழ்க்கையைத் தொடருவதற்கு பெலன் தேவைப் பட்டது? நீ தேவனுக்குப் பணி செய்யும் போது, எப்பொழுது ஆற்றல் இழந்தவனாய் காணப்பட்டாய்?
படைப்பின் கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய பிள்ளைகளாகப் படைத்தீர், எங்களுடைய குறைவுகளில் நீர் செயல் படுவதற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். சந்தோஷத்தோடும் மகிழ்ச்சியோடும் உமக்குப் பணிசெய்ய எங்களுக்கு உதவியருளும்.