“த ஃப்ரீ ஸ்டேட் ஆஃப் ஜோன்ஸ்” (The Free State of Jones ) என்ற திரைப் படம், நியூட்டன் நைட் என்பவர், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நடத்திய உள் நாட்டு யுத்தத்தைக் குறித்து விவரிக்கின்றது. ஐக்கிய ஆட்சியிலிருந்து பிரிந்த சிலரும், சில அடிமைகளும் யுனியன் இராணுவத்திற்கு உதவியாயிருந்தனர், பின்னர் யுத்தம் முடிந்தபோது, அடிமைகளின் எஜமானர்களையும் எதிர்த்தனர். அநேகர் நைட்டைத் தங்களுக்குத் தலைவராகக் கொண்டனர், ஐக்கிய ஆட்சியிலிருந்து பிரிந்த நைட்டின் உயிரை இரு அடிமைகள் காப்பாற்றினர், அவர்கள், அவரை யாரும் எளிதில் செல்ல முடியாத, அடர்ந்த காட்டுக்குள் இருந்த சதுப்பு நிலப் பகுதிக்கு எடுத்துச் சென்றனர், ஐக்கிய ஆட்சியாளரின் படைகளிடமிருந்து தப்பிச் சென்ற போது, அவருடைய காலில் ஏற்பட்ட காயத்தையும் குணப்படுத்தினர், இந்த அடிமைகள் மட்டும் அவரைக் கைவிட்டிருந்தால், அவர் மரித்திருப்பார்.
யூதாவின் ஜனங்கள் காயமுற்றவர்களாய், கைவிடப்பட்டவர்களாய், உதவியற்றவர்களாய் எதிரிகளைச் சந்தித்து வந்தனர். இஸ்ரவேலரை அசீரியர்கள் மேற்கொண்டனர். ஒரு நாள் அவர்கள் (யூதா) எதிரிகளால் மேற்கொள்ளப்படுவர் என ஏசாயா தீர்க்கதரிசி சொல்லியிருந்தார், பாபிலோனியர்கள் அவர்களை மேற்கொண்டனர். யூதாவுக்கு உதவி செய்யவும், அவர்களைக் கைவிடாமல், மீட்கும்படியாகவும் ஒரு தேவன் தேவை. தேவனுடைய உறுதியளிக்கும் வாக்குத்தத்தங்களைப் பெற்ற போது அவர்களின் நம்பிக்கை அவர்களை எப்படி முன்னோக்கிச் செல்ல தூண்டியிருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார். ”பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்” (ஏசா.43:5) என்கின்றார் தேவன். எத்தனை பெரிய ஆபத்துக்களை அவர்கள் சந்திக்க நேரிட்டாலும், எவ்வளவு வேதனைகளை அவர்கள் சகித்தாலும் தேவன் அவர்களோடு இருக்கின்றார். அவர்கள் “தண்ணீர்களைக் கடக்கும் போது” அவர்களோடு இருப்பார், அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு நடத்திச் செல்வார் (வச. 2), அவர் “அக்கினியில் நடக்கும் போது” கூடவே நடந்து வருவார், சுட்டெரிக்கும் நெருப்பிலும் அவர்களுக்கு உதவுகின்றார் (வச. 2).
தேவன் தன்னுடைய பிள்ளைகளின் கூடவே இருந்து அவர்களைப் பாதுகாக்கின்றார், வழிநடத்துகின்றார், அவர் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை, வாழ்விலும், மரணத்திலும் கைவிடுவதில்லை என்பதாக வேதாகமம் முழுவதிலும் காண்கின்றோம். நீ கடினமான இடத்தில் இருந்தாலும் தேவன் உன்னோடு இருக்கின்றார், அவர் உன்னை தண்ணீரைக் கடக்கச் செய்வார்.
நீ எத்தகைய ஆழமான நீரைக் கடக்கின்றாய்? அவற்றின் வழியாகவும் தேவன் வந்து உன் இருதயத்தை எப்படி பெலப்படுத்துகின்றார்?
தேவனே, தண்ணீர் ஆழமாக உள்ளது, நான் இதை எப்படி கடந்து செல்வேன் என்பதை அறியேன். நீர் என்னோடிருந்து என்னைச் சுமப்பதாக வாக்களித்துள்ளதற்காக நன்றி கூறுகின்றேன்.