மற்றவர்களுக்குப் பாடல்கள் பாடுவதன் மூலம் அவர்களை ஊக்கப்படுத்துவது பீட்டருக்கு மிகவும் விருப்பமானது. ஒரு நாள் அவனுக்குப் பிடித்தமான உணவுவிடுதியில் மதிய உணவு சாப்பிட்டோம், அப்பொழுது அவன் உணவு பரிமாறுபவர் மிகவும் களைப்பாக இருப்பதைக் கண்டான், அவளிடம் சில கேள்விகளைக் கேட்டான், பின்னர் அவளை உற்சாகப் படுத்தும்படி பிரசித்திப் பெற்ற பாடல் ஒன்றைப் பாடினான். “நல்லது, அன்புள்ள நண்பா, நீ எனக்கு இந்த நாளை மகிழ்ச்சியாக மாற்றினாய், மிக்க நன்றி” என்று அவள் ஒரு சிரிப்புடன் கூறிக் கொண்டே, எங்களது உணவு தேவையைக் குறித்துக் கொண்டாள்.
செப்பனியா புத்தகத்தை திறந்தோமானால், அங்கு தேவன் பாடுவதை விரும்புகிறார் என்பதாகக் காண்கின்றோம். இங்கு தீர்க்கதரிசி தன்னுடைய வார்த்தைகளினால் ஒரு அழகிய காட்சியை காண்பிக்கின்றார், அவர் தேவனை ஒரு இசைஞராகவும், அவர் தன்னுடைய பிள்ளைகளோடு சேர்ந்து பாட விரும்புகின்றார் எனவும் வர்ணிக்கின்றார். மேலும், “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (3:17) .என்கின்றார். அவருடைய இரக்கத்தினால் மாற்றம் பெற்றவர்களோடு எப்பொழுதும் தேவனாகிய கர்த்தருடைய பிரசன்னம் இருக்கும் என்று தேவன் வாக்களிக்கின்றார், மேலும், அதோடு நின்றுவிடவில்லை, அவர் தன்னுடைய பிள்ளைகளை, “நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு” (வ.14) என்கின்றார்.
ஒரு நாள், நாம் தேவனோடு கூட இருப்போம் என்பதை கற்பனை செய்து பார்க்க முடிகின்றது, அப்பொழுது, இரட்சகராகிய இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தவர்கள் யாவரும் அவரோடு இருப்பார்கள். நம்முடைய பரலோக பிதா, நம்மோடு சேர்ந்து பாடும் பாடல்களைக் கேட்பதற்கும், அவருடைய அன்பினையும், அவர் நம்மை அங்கிகரித்து, ஏற்றுக் கொண்டதையும் அநுபவிப்பது எத்தனை அற்புதமாக இருக்கும்.
தேவன் உன் மீது வைத்துள்ள அன்பினை எவ்வாறு கொண்டாடப் போகின்றாய்? அவர் எந்தப் பாடலை உன்னோடு சேர்ந்து பாடுகின்றார்?
பரலோகத் தந்தையே, நாங்கள் இயேசுவை உண்மையாய் பற்றிக்கொண்டபடியால், நீர் எங்களை ஏற்றுக் கொண்டதோடல்லாமல், உம்முடைய பிள்ளைகளோடு மகிழ்ந்திருக்கிறீர், உம்முடைய அன்பிற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன்.