சுகாதார பாதுகாப்பு வழங்குனர் தரும் உற்சாகமளிக்கும் வார்த்தைகள், நோயாளிகள் வேகமாக குணமடைய உதவியாயிருக்கின்றது என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இது சம்பந்தமான ஆய்வு நடத்திய தன்னார்வ நபர்கள், தோல் அலர்ஜியினால் ஏற்படும் ஊரல் கொண்டிருந்த நோயாளிகளின் விளைவுகளைக் குறித்து கண்டறிந்தனர். தங்கள் மருத்துவரிடமிருந்து ஊக்கம் தரும் வார்த்தைகளைப் பெற்ற நோயாளிகள், மற்றவர்களைக் காட்டிலும் குறைவான அளவே ஊரலையும், வேதனையையும் பெற்றிருந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நீதிமொழிகளை எழுதியவர், ஊக்கம் தரும் வார்த்தைகளின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தார். “இனிய சொற்கள் தேன் கூடு போல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்” (நீதி. 16:24) என எழுதுகின்றார். நேர் முகச்சிந்தனையுள்ள வார்த்தைகள் நமது உடல் நலத்திற்கு உதவுவது மட்டுமல்ல, ஞானமுள்ள வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுக்கும் போது, அது காரியங்களை வாய்க்கப்பண்ணும் (வச. 20) என்கின்றார். நம் வாழ்வின் சவால்களைச் சந்திக்க, அவை ஊக்கமளிப்பதோடு, நம் எதிர்காலத்தையும் சந்திக்க உதவியாயிருக்கும்.
ஏன், எப்படி ஞானமுள்ள வார்த்தைகள் நம் அனுதின வாழ்விற்கு பெலனையும், சுகத்தையும் கொண்டு வருகின்றது என்பதை நாம் முற்றிலும் அறியோம். ஆயினும், நம்முடைய பெற்றோர், பயிற்சியாளர்கள் மற்றும் நம்முடன் பணிபுரிபவர்கள் தரும் ஊக்கமும், வழிகாட்டலும் சோதனைகளைச் சகிக்க பெலன் தருவதோடு, நம்மையும் வெற்றிக்கு நேராக வழிநடத்தும். நாம் சோதனைகளைச் சந்திக்கும் போது, வேத வார்த்தைகள் நமக்கு ஊக்கம் அழிப்பதோடு, சோதனைகளைச் சகிக்கவும், நாம் நினைக்க முடியாத சூழல்களையும் கூட கடந்து செல்லவும் நமக்கு பெலனளிக்கின்றன. தேவனே, உம்முடைய ஞானத்தினால் எங்களைப் பெலப் படுத்தியருளும், எங்களுடைய இனிய வார்த்தையினால் சுகத்தையும், நம்பிக்கையையும், நாங்கள் சந்திக்கின்றவர்களுக்கு வழங்கவும் எங்களுக்கு உதவியருளும்.
உன்னுடைய வாழ்வில் யாரிடம் இனிய வார்த்தைகளைப் பேசியுள்ளாய்?
மற்றவர்களோடு ஊக்கம் தரும் வார்த்தைகளைப் பேசுவதன் அவசியம் என்ன?
அன்புள்ள தந்தையே, சுகம் தரும் உம்முடைய வார்த்தைகளுக்காகவும், நம்பிக்கைக் காகவும் உமக்கு நன்றி கூறுகின்றேன்.