ஓர் ஆங்கில திரைப் படம், ஓநாய்களின் உணர்வுகளையும், செயல் பாடுகளையும் குறித்து காட்டுகின்றது. அவை மகிழ்ச்சியாக இருக்கும் போது தங்களின் வாலை ஆட்டும், முரட்டுத் தனமாக விளையாடும். ஆனால் அதன் கூட்டத்தில் ஓர் ஓநாய் மரித்தால் அவை தங்கள் வாலைத் தொங்கவிட்டுக் கொண்டு, கவலை தோய் ந்த குரலில் ஊளையிடும்.
துக்கம் என்பது ஒரு வலிமையான உணர்வு. அதை நம்முடைய உறவினரின் மரணத்தின் போதோ அல்லது நம்பிக்கையை இழந்த வேளைகளிலோ நாம் அனைவருமே அநுபவித்திருப்போம். மகதலேனா மரியாள் இதை அநுபவித்தாள். அவள் கிறிஸ்துவின் ஆதரவாளர்களின் கூட்டத்தில் இருந்தாள், அவள் இயேசுவோடும், அவருடைய சீஷர்களோடும் பிரயாணம் பண்ணினாள் (லூக்.8:1-3). ஆனால் அவருடைய கொடிய சிலுவை மரணம், அவர்களை இயேசுவிடமிருந்து பிரித்து விட்டது. இப்பொழுது மரியாள் இயேசுவிற்கு கடைசியாகச் செய்யக் கூடியது, அவருடைய உடலுக்கு சுகந்தவர்க்கங்கள் பூசுவது ஒன்றுதான், ஆனால் ஓய்வு நாள் குறுக்கிட்டது, வாரத்தின் முதல் நாளில் சுகந்த வர்க்கங்களோடு கல்லறையினிடத்தில் வந்த மரியாள், உயிரற்ற, நொறுக்கப் பட்ட உடலைப் பார்ப்பதற்குப் பதிலாக, உயிருள்ள இரட்சகரைப் பார்த்தாள் என்பது எப்படியிருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்! அவள் தனக்கு முன்பாக நின்ற மனிதனை முதலில் அடையாளம் கண்டு கொள்ள முடிய வில்லை, ஆனால் அவர் அவளுடைய பெயரைச் சொல்லி அழைத்த போது, அவர் இயேசு என்று அறிந்துகொண்டாள். அந்த நிமிடமே அவளுடைய துக்கம் சந்தோஷமாக மாறியது. இப்பொழுது மரியாள் பகிர்ந்துகொள்ளும்படி மகிழ்ச்சியான செய்தியை வைத்திருக்கின்றாள், “நான் கர்த்தரைக் கண்டேன்!” (யோவா. 20:18) என்பதே அச்செய்தி.
இருள் சூழ்ந்த இவ்வுலகினுள் இயேசு விடுதலையையும், வாழ்வையும் கொண்டு வந்தார், அவர் எதற்காக இவ்வுலகிற்கு வந்தாரோ, அதை உயிர்த்தெழுந்ததன் மூலம் நிறைவேற்றினார், இந்த உண்மை கொண்டாடத் தகுந்தது. மரியாளைப் போன்று, நாமும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடுவோம், அவர் உயிரோடிருக்கிறார் என்ற நற்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வோம்! அல்லேலூயா!
உன்னுடைய துக்கம் சந்தோஷமாக மாறின அநுபவம் எப்பொழுது கிடைத்தது? கிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்தியை இன்று யாரோடு பகிர்ந்து கொள்ளப் போகின்றாய்?
இயேசுவே, நான் உம்முடைய உயிர்த்தெழுதலையும், நீர் எனக்குத் தந்துள்ள புதிய வாழ்வையும் கொண்டாடுகின்றேன்.