“மேரி பாப்பின்ஸ் ரிட்டர்ன்ஸ்” என்ற திரைப் படத்தில் வரும் பிரசித்தி பெற்ற அமெரிக்க நடிகையான எமிலி பிளன்ட்டினுடைய அழகிய குரலை திரைப் பட ரசிகர்கள் கேட்டிருப்பர். இவளுடைய திருமண வாழ்வின் நான்காவது ஆண்டில், வியத்தகு வகையில் அவளுடைய கணவன் அவளின் குரல் வளத்தைக் கண்டுபிடித்தார். ஒரு நேர்முக பேட்டியின் போது, அவன் தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான், அவன் முதன் முறையாக அவள் பாடுவதைக் கேட்ட போது, “இதனைக் குறித்து எப்பொழுது என்னிடம் சொல்லலாம் என்றிருந்தாய்?” என்று நினைத்ததாகக் கூறினான்.
நம்முடைய உறவுகளிலும், அநேக நேரங்களில் நம்மை வியக்கச் செய்யும், புதியதும், எதிர் பாராததுமான விளக்கங்களைக் கற்றுக் கொள்வோம். மாற்கு சுவிசேஷத்தில், ஆரம்பத்தில் கிறிஸ்துவின் சீஷர்கள் இயேசுவைக் குறித்து ஒரு தெளிவற்ற காட்சியையே கொண்டிருந்தனர், அவர் யார் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள போராடிக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் கலிலேயா கடலில் இயேசுவைச் சந்தித்தபோது, அவர் தன்னை இன்னும் அதிகமாக வெளிப்படுத்தினார், இம்முறை இயற்கையின் சக்திகளுக்கு மேலாக அவருக்கிருந்த வல்லமையைக் காண்பித்தார்.
ஐயாயிரத்திற்கும் மேலான ஜனங்களைப் போஷித்த பின்பு, இயேசு தன் சீஷர்களை கலிலேயா கடலின் வழியாக அனுப்புகின்றார், அங்கு அவர்கள் வலிமையான புயலில் சிக்கிக் கொள்கின்றனர். விடிவதற்கு சற்று முன்பு, தண்ணீரின் மேல் ஒருவர் நடந்து வருவதை சீஷர்கள் கண்டு பயந்தனர். அவர்களுக்குப் பழக்கமான குரலில், கிறிஸ்துவின் ஆறுதலளிக்கும் வார்த்தைகளைக் கேட்டனர், “திடன்கொள்ளுங்கள், நான் தான், பயப்படாதிருங்கள்” (மாற்.6:50) என்ற வார்த்தைகளைக் கேட்டனர். பின்பு அவர் சீற்றத்தோடிருந்த கடலை அமர்த்தினார். இந்த வல்லமையைக் கண்ட சீஷர்கள் “மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்” (6:51), ஆயினும் கிறிஸ்துவின் வல்லமையை முழுமையாக கிரகித்துக் கொள்ள போராடினர்.
நம்முடைய வாழ்க்கைப் போராட்டத்திலும், இயேசுவின் வல்லமையை நாம் அநுபவிக்கும் போது தான் அவர் யார் என்பதைப் பற்றிய முழு காட்சியை பெற்றுக் கொள்கின்றோம், அது நம்மை வியக்கச் செய்கின்றது.
கிறிஸ்துவின் வல்லமையைப் பற்றி கற்றுக் கொண்ட போது, அவரைப் பற்றிய முழு காட்சியையும் அறிந்து கொள்ள உதவியாக இருந்ததா? அவரின் வல்லமையை வெளிப்படுத்தும் வேறு வேதாகம
கதைகள் யாவை?
இயேசுவே, உமது வல்லமையால் எங்களை பிரமிக்கச் செய்கின்றீர், இன்னும் எங்கள் கண்களைத் திறந்து உம்மைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்து கொள்ளவும், உம்மை ஆராதிக்கவும் உதவியருளும்.