மிகவும் புகழ்ச்சி பெற்ற சிற்ப கலைஞரான லிஸ் ஷெப்பர்ட், தன்னுடைய சிற்பங்களையெல்லாம் பார்வைக்கு வைத்தார். மரணப் படுக்கையில் இருந்த தன்னுடைய தந்தையோடு தான் செலவிட்ட, அதிமுக்கியமான அந்த விலையேறப்பெற்ற கடைசி நேரத்தைக் குறித்து அந்தக் காட்சிப் பொருட்களில் தெரிவித்திருந்தாள். அது வெறுமையையும், இழப்பையும் குறித்து வெளிப்படுத்தியது. நீ மிகவும் நேசிக்கும் நபர்கள் இப்போது நாம் போய் பார்க்க முடியாத இடத்தில் இருக்கின்றனர் என்ற உணர்வைக் காட்டியது.

மரணம் விலையேறப் பெற்றது என்ற கருத்து நம்முடைய எண்ணங்களுக்கு மாறானதாகத் தோன்றலாம். “கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது” (சங். 116:15) என சங்கீதக்காரன் கூறுகின்றார். தேவன் அவருடைய பிள்ளைகளின் மரணத்தை பொக்கிஷமாகக் கருதுகின்றார், அவர்கள் இந்த உலகத்தைவிட்டு கடந்து செல்லும் போது, தேவன் அவர்களை தன்னுடைய வீட்டிற்கு வரவேற்கிறார்.

தேவனுக்கு உண்மையான ஊழியக்காரர் (பரிசுத்தவான்கள்) என்று அழைக்கப்படுபவர்கள் யார்? தேவன் அவர்களை மீட்டுக்கொண்டதால், நன்றியோடு அவருக்குப் பணிபுரிபவர்கள், அவருடைய பெயரைச் சொல்லி கூப்பிடுபவர்கள், அவருடைய சமுகத்தில், தாங்கள் பேசுகின்ற வார்த்தைகளை நிறைவேற்றுகின்றவர்கள் (சங். 116:16-18) என சங்கீதக்காரன் கூறுகின்றார். இவர்கள் தேவனோடு நடக்கும்படி தெரிந்துகொண்டவர்கள், அவர் தந்த விடுதலையைப் பெற்றுக் கொண்டவர்கள், அவரோடுள்ள உறவில் வளரும்படி தங்களை பழக்கிக் கொண்டவர்கள்.

இப்படிச் செய்கின்றவர்கள் எப்பொழுதும் “தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டதும், விலையேறப் பெற்றதுமாயிருக்கிற” தேவனோடு இருப்பார்கள். “இதோ, தெரிந்து கொள்ளப்பட்டதும், விலையேறப் பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின் மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை” என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது (1 பேது. 2:4-6). நாம் தேவன் பேரில் நம்பிக்கையாயிருக்கும் போது, இவ்வுலக வாழ்வை விட்டு நாம் பிரிந்து செல்வது அவருடைய பார்வையில் அருமையாயிருக்கும்.