“நான் என் தாயாரோடு அதிக நாட்கள் இருந்தமையால், அவள் வெளியேறினாள்!” இவை கே.சி.யின் வார்த்தைகள், தன் வாழ்வை இயேசுவுக்கு அர்ப்பணிக்கும் முன்பு, அவருடைய வாழ்வில் சோகம் நிறைந்திருந்தது. அவர் தன் போதை பழக்கத்தைத் தொடர, தனக்கன்பானவர்களிடமிருந்தும் திருட வேண்டியதாயிற்று என்பதை ஒத்துக்கொண்டார். இது அவருடைய கடந்த கால வாழ்க்கை, இப்பொழுது, அவர் தூய்மைப் படுத்தப்பட்ட பின்பு, தான் கடந்து வந்த வருடங்கள், மாதங்கள், நாட்களை நினைத்துப் பார்க்கிறார். நானும் கே.சி.யும் அமர்ந்து, தேவனுடைய வார்த்தைகளை, கிரமமாக கற்றுக்கொண்டிருக்கிறோம், இப்பொழுது ஒரு மாற்றம் பெற்ற மனிதனை நான் காண்கின்றேன்.
முன்பு அசுத்த ஆவிகளால் பிடிக்கப் பட்டிருந்த ஒரு மனிதனின் வாழ்வு, மாற்றப் பட்டதை மாற்கு 5:15ல் காண்கின்றோம். சுகம் பெறுவதற்கு முன்பு, உதவியற்றவன், வீடற்றவன், நம்பிக்கையிழந்தவன், கைவிடப்பட்டவன் ஆகிய வார்த்தைகளே அவனை விவரித்தன (வச. 3-5). இயேசு அவனை விடுவித்த பின்பு, இவையெல்லாம் மாறிவிட்டன (வச. 13). இயேசு கிறிஸ்து வருவதற்கு முன்பு, கே.சி. யின் வாழ்வும் இயல்பு வாழ்வைவிட வெகு தூரத்தில் இருந்தது. அவனுக்குள்ளேயிருந்த குழப்பத்தை, அவன் பயங்கரமாக வெளிப்படுத்தினான். இத்தகைய, காயப்படுத்தும் மக்கள், பாழடைந்த கட்டடங்களிலும், வாகனங்களிலும் மற்றும் யாருமற்ற இடங்களிலும் வாழ்கின்றனர், சிலர் தங்கள் வீடுகளிலேயே தங்கியிருந்தாலும், உணர்வு சார்ந்து தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்கின்றனர். கண்களால் காணமுடியாத சங்கிலிகள், அவர்களின் இருதயத்தையும், மனதையும் கட்டி வைத்திருப்பதால், அவர்கள் தங்களை, மற்றவர்களிடமிருந்து தனிமைப் படுத்திக் கொள்கின்றனர்.
கடந்த காலம், நிகழ்காலத்தில் ஏற்பட்ட காயங்கள், அவமானங்களின் மத்தியில் நம்முடைய நம்பிக்கைக்குரியவர் இயேசு ஒருவரே. இரக்கத்தின் கரங்களை விரித்தவராய், நமக்காகக் காத்திருக்கும் நம் தேவனிடம் லேகியோனோடும், கே.சி.யோடும் நாமும் ஓடிச் சென்று அவர் தரும் விடுதலையைப் பெற்றுக்கொள்வோம் (வச. 19).
இயேசு உன்னை எவ்வாறு மாற்றினார்? உன்னுடைய சாட்சியை இன்று யாரிடம் பகிர்ந்து கொள்ளப் போகின்றாய்?
தேவனே, கடந்த காலத்தில் என்னைக் கட்டுப் படுத்தின யாவற்றையும், இயேசு கிறிஸ்துவின் மூலமாய் தூர எறிந்து விட செய்தமையால் உமக்கு நன்றி கூறுகின்றேன்.