அநேக ஆண்டுகளுக்கு முன்பு, நானும் என்னுடைய மகன்களும் வடக்கு இடாகோவிலுள்ள, செல்வே பிட்டர்ரூட் என்ற காட்டுப்பகுதிக்குச் சென்று சில நாட்கள் அங்கு தங்கியிருந்தோம். அது கிரிஸ்லி கரடிகள் வாழும் இடம், எனவே நாங்கள், எங்களோடு கரடியை ஓட்டும் தெளிப்பான்களைக் கொண்டு வந்திருந்தோம். நாங்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றி சுத்தமாக வைத்துக்கொண்டோம். எனவே எந்த கிரிஸ்லி கரடியையும் சந்திக்க நேரிடாது என எண்ணினோம்.
ஒரு நாள், நடு இரவில் என்னுடைய மகன் ராண்டி உருண்டு கொண்டு, தன்னுடைய படுக்கும் உறையை விட்டு வெளியேற முயற்சித்துக்கொண்டிருந்தான். நான் உடனடியாக என்னுடைய டார்ச்லைட்டை அடித்து, அவன் ஏதோ ஒரு கோபமுள்ள கரடியின் பிடியில் சிக்கிக்கொண்டானோ என எதிர்பார்த்தேன்.
அங்கு, தன்பின்னங்கால்களில், நிமிர்ந்து அமர்ந்துகொண்டு, முன்கால்களின் பாதங்களை அசைத்தவாறு ஒரு வயல் எலி அமர்ந்திருந்தது, அதன் பற்களால் ராண்டியின் தொப்பியை இறுகப்பற்றிக் கொண்டிருந்தது, அது அத்தொப்பியை இழுத்து, இழுத்து ராண்டியின் தலையிலிருந்து கழற்றியது. இதனைப்பார்த்த நான் சிரித்து விட்டேன், உடனே அந்த எலி அதனைப் போட்டு விட்டு ஓடிவிட்டது. நாங்களும் எங்களுடைய தூங்கும் உறைக்குள் புகுந்தோம். நான் பதட்டத்தோடு, வஞ்சிக்கிற பிசாசுகளைக் குறித்து எண்ண ஆரம்பித்ததால், என்னால் மீண்டும் தூங்க முடியவில்லை.
பிசாசு, இயேசு கிறிஸ்துவை சோதித்ததைக் குறித்து சற்று சிந்தித்துப் பார்ப்போம் (மத். 4:1-11). அவர் தம்முடைய சோதனைகளை வேத வசனங்களைக் கொண்டு மேற்கொண்டார். ஒவ்வொரு முறை அவர் பதிலளித்தபோதும், தேவன் இவற்றைக்குறித்து என்ன கூறியிருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கிறார், அதனால் அவரால் கீழ்ப்படிய முடிந்தது. சாத்தானும் ஓடிப்போய் விடுகிறான்.
சாத்தான் நம்மை விழுங்கும்படி வகை தேடினாலும், அவனும் அந்தச் சிறிய எலியைப் போன்றே படைக்கப்பட்டவன். எனவே தான் யோவான், “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களில் (நம்மில்) இருக்கிறவர் பெரியவர் (1 யோவா. 4:4) என்கிறார்.
உனக்கு வருகிற பெரிய சோதனைகள் எவை? இவற்றைக்குறித்து தேவன் என்ன சொல்கின்றார்?
நீ சோதிக்கப்படும் போது அந்த வார்த்தைகளை எப்படி பயன் படுத்துவாய்?
அன்புள்ள தேவனே, எனக்கு வருகிற சோதனைகளைக் காட்டிலும் நீர் பெரியவராய் இருக்கிறபடியால் உமக்கு நன்றி கூறுகின்றேன். தயவு கூர் ந்து இதனை விட்டு வெளியே வர எனக்குதவியருளும்.