தன்னுடைய வீட்டில், சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வளர்த்த செடியை, என் சிநேகிதி என்னிடம் கொடுத்தாள். அந்தச் செடி என்னுடைய உயரத்திற்கு இருந்தது. அதில் மூன்று நீண்ட, மெல்லிய கிளைகளிலிருந்து பெரிய இலைகள் வளர்ந்திருந்தன. அந்த இலைகளின் சுமையைத் தாங்க முடியாத அந்த கிளைகள் தரையை நோக்கி வளைந்து காணப்பட்டன. அந்த கிளைகளை நேராக்க, நான் அந்த தொட்டியின் அடிப்பக்கம் ஒரு கட்டையை தாங்கியாகக் கொடுத்து, அச்செடியின் மீது சூரிய வெளிச்சம் படும் படி ஜன்னலின் அருகில் வைத்தேன். சூரிய வெளிச்சம் பட்டு, இலைகளும், வளைந்த கிளையும் நேராக வளர்ந்து அதன் மோசமான நிலையை மாற்ற முயற்சித்தேன் .
இந்தச் செடியைப் பெற்ற சில நாட்களில், இதே போன்ற மற்றொரு செடியை அருகிலுள்ள ஒரு அலுவலகத்தின் முன் அறையில் பார்த்தேன். அதுவும் மூன்று மெல்லிய கிளைகளிலிருந்து வளர்ந்திருந்தது. ஆனால், அக்கிளைகள் மூன்றும் பின்னப்பட்டு, பெரிய ,உறுதியான கொப்பாக செயல்பட்டது. எந்த உதவியுமின்றி இச்செடி நேராக நின்றது.
ஒரே தொட்டியில் வைக்கப்பட்ட இரு செடிகள், அநேக ஆண்டுகளாக இருந்தும் அவை தனித்தனியே வளர்ந்து வந்தால், தேவன் அவர்கள் மகிழ்ந்திருக்கும் படி கொடுக்கும் நன்மைகளில் சிலவற்றை மட்டுமே அவர்களால் அநுபவிக்கமுடியும். ஆனால், அவர்களுடைய வாழ்வு தேவனோடு பின்னப்படும் போது, அதிக உறுதியையும், நெருங்கியிருத்தலையும் பெற்றுக்கொள்வர். அவர்களுடைய வாழ்வு உறுதியாக வளரும். முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது (பிர. 4:12).
வீட்டில் வளரும் செடியைப் போன்று, திருமணங்களையும், நட்புறவுகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. இந்த உறவுகள் பரிசுத்த ஆவியானவரைத் தங்களோடு இணைத்துக் கொண்டு வாழும்போது, தேவன் அவர்களின் பிணைப்பின் மையத்தில் இருப்பார். அன்பையும், கிருபையையும் முடிவில்லாமல் வழங்கும் அவர், நாம் ஒருவரோடொருவர் இணைந்து
உன் வாழ்வில் நீ தொடர்பு கொண்டுள்ள முக்கிய நபர்களோடுள்ள ஆவியின் பிணைப்பு வலுபெற என்ன செய்ய போகின்றாய்? இணைந்து தேவனுக்குப் பணி செய்யும் போதும், அவரை ஆராதிக்கும் போதும், உன்னுடைய வாழ்வு எப்படி மாறும்?
அன்புள்ள தேவனே, நீர் என்னுடைய நெருக்கமான உறவில் இணைந்துகொள்ள உம்மை அழைக்கின்றேன். நான் உம்மை கனப்படுத்தவும், உம்மையே சார்ந்து வாழவும் எனக்குதவியருளும்.