பிரையன், தன்னுடைய சகோதரனின் திருமண நிகழ்ச்சியில் வரவேற்பாளராக நியமிக்கப்பட்டான். அவன் அதைச் சரியாக செய்யவில்லை. எனவே, அவனுடைய குடும்பத்தினர் யாவரும் அவனைக் குறித்து அதிருப்தியடைந்தனர். அவனுடைய சகோதரி ஜாஸ்மின்னும் கூட. அவள் தான் அன்றைய வைபவத்தில் வேதாகமப் பகுதியை வாசிக்கும் படி நியமிக்கப் பட்டிருந்தாள். அந்த நிகழ்ச்சியில், அவள் 1 கொரிந்தியர் 13 ஆம் அதிகாரத்தை தவறில்லாமல், அழகாக வாசித்தாள். திருமணம் முடிந்த பின்னர், அவளுடைய தந்தை அவளை, அவளுடைய சகோதரனுக்கு ஒரு பிறந்தநாள் பரிசு வழங்குமாறு கூறினார். அவள் தயங்கினாள். அவளால் தான் வாசித்த வேத பகுதியிலுள்ளபடி அன்பு செய்வது கடினமாயிருந்தது. அன்று மாலை முடியுமுன் அவள் தன் மனதை மாற்றிக் கொண்டாள். “நான் அன்பைக் குறித்த வேத வாக்கியங்களை வாசித்து விட்டு, அதன்படி செயல் படாமல் இருக்க முடியாது” என்றாள்.
எப்பொழுதாகிலும் நீ வாசித்த அல்லது கேட்ட வேத வார்த்தையின் படி செயல் படவில்லையே யென்று குத்தப்பட்டதுண்டா? இதில் நீ தனிப்பட்டவனல்ல தேவனுடைய வார்த்தையை கேட்பதும், வாசிப்பதும் எளிது. ஆனால் அதின் படி நடக்க வேண்டுமே! எனவே, தான் யாக்கோபு “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின் படி செய்கிறவர்களாயும் இருங்கள்” (யாக். 1:22) எனக் குறிப்பிடுகின்றார். அவர் தரும் கண்ணாடி பிம்பத்தின் எடுத்துக்காட்டு நம்மைச் சிரிக்க செய்கின்றது. அதின் மூலம் நம்மில் காணப்படும் குறைகளை நாம் உணர்ந்து அதில் கவனம் செலுத்தும் படி அவர் சொல்கின்றார். ஆனால், குறைகளை உணர்வது மட்டும் போதும் என்றிருப்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். மேலும் வேத வார்த்தைகளை “உற்றுப்பார்த்து” அதில் “நிலைத்திரு” (வச. 25) என யாக்கோபு நம்மைத் தூண்டுகிறார். ஜாஸ்மின் எதைக் கட்டாயமாகச் செய்யும்படித் தூண்டப்பட்டாளோ அதை நாமும் செய்யும்படி அவர் நம்மை ஊக்கப்படுத்துகின்றார். வேத வார்த்தைகளின் படி வாழ்ந்து காட்டு. இதை விட வேறொன்றையும் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கவில்லை
வேத வார்த்தைகளை ஆழ்ந்து கற்ற பின் எப்பொழுது உன் வாழ்வை மாற்றிக் கொண்டாய்? எப்பொழுது உன் வாழ்வு கனி நிறைந்ததாயிற்று?
தேவனே, வேத வார்த்தைகளை ஆழ்ந்து புரிந்து கொள்ளவும் அதின்படி நடக்கவும் எனக்குக்
கற்றுத் தாரும்.