கெரி, பால் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்ட போது, இருவருக்குமே சமைக்கத் தெரியாது. ஒரு நாள் மாலை கெரி, மெக்ரொனி வகை உ.ணவை அதிகமாக தயாரித்தாள். எனவே அந்த தம்பதியர் மறுநாளும் அதே உணவையே எடுத்துக் கொண்டனர். மூன்றாம் நாள் பால் அதிக அளவு பாஸ்தாவை தயாரித்தார். எனவே அவர்கள் அந்த வாரம் இறுதி வரை அதே உணவையே எடுத்துக்கொள்ளலாமெனத் திட்டமிட்டனர். அன்று இரவு அவர்கள் சாப்பிட உட்கார்ந்த போது கெரி, “இவ்வகை உணவு எனக்கு சலித்துவிட்டது’’ என்றாள்.
இஸ்ரவேலர் நாற்பது ஆண்டுகள் ஒரே வகை உணவைச் சாப்பிட்டார்களென்றால், அது எப்படி இருந்திருக்கும். ஒவ்வொரு நாள் காலையும், தேவன் அவர்களுக்களித்த இனிமையான உணவைச் சேகரித்தனர். (மறுநாள் ஓய்வு நாளாயிருந்தாலன்றி, மீதமொன்றும் வைக்க கூடாது (யாத். 16:23-26). அவர்களுடைய திறமையினால் அதைச் சுட்டனர், வேக வைத்தனர் (வச. 23), ஆனாலும், எகிப்தில் தாங்கள் அநுபவித்த கொடுமைக்கும், அடிமைத்தனத்திற்கும் பலனாகக் கிடைத்த அந்த அற்ப உணவிற்காக அவர்கள் ஏங்கினர்! (வச. 3, எண். 11:1-9).
நாமும் கூட, சில வேளைகளில் நம் வாழ்வு முன்பிருந்தது போல இல்லையே என ஏங்கினதுண்டு, அல்லது ஒரு வேளை ஒரே வகையான வாழ்க்கை முறை நம்மை சலிக்கச் செய்யலாம். இஸ்ரவேலர்கள் தேவன் மீது நம்பிக்கை வைக்கவும், ஒவ்வொரு நாளும், அவரையே சார்ந்திருக்கும் படியும், தேவன் அவர்களின் தேவைகளனைத்தையும் உண்மையாய் கொடுத்து வந்தார் என்பதை யாத்திராகமம் 16ஆம் அதிகாரம் விளக்குகின்றது.
நம்முடைய தேவைகளனைத்தையும் தருவதாக தேவன் வாக்களித்துள்ளார். அவர் நம்முடைய ஏக்கங்களை நிறைவேற்றுவார், -நம்முடைய ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறார் (சங். 107:8).
கடந்த காலங்களில் தேவன் உன்னுடைய தேவைகளை எவ்வாறு சந்தித்து வந்துள்ளார்?
அவர் மேல் நம்பிக்கை வைப்பதற்கு தடையாக உள்ள காரியங்கள் என்ன?
அப்பா பிதாவே, என்னைப் பாதுகாத்து, என் தேவைகளையெல்லாம் தருவேன் என்று வாக்களித்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றேன்