அநேக திரைப் பட விமர்சகர்கள், டேவிட் லீன் தயாரித்த லாரன்ஸ் ஆப் அரேபியா என்ற திரைப் படத்தை, எல்லாப் படங்களுக்கும் மேலானதாகக் கருதுகின்றனர். அதில் வருகின்ற எல்லையில்லாத அரேபிய பாலைவனத்தின் காட்சிகள் திரைப்பட தயாரிப்பாளர்களின் தலை முறைகளைக் கவர்ந்துள்ளது. திரைப்படத் துறையில் சிறந்த விருது பெற்ற தயாரிப்பாளரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், “நான் முதன் முறையாக லாரன்ஸ் படத்தைப் பார்த்த போது,  கவரப் பட்டேன், அது என்னை மிகவும் சிறியவனாக எண்ணச் செய்தது. இன்னமும் என்னை குறுகியவனாக எண்ணச் செய்கின்றது. அதுவே அப்படத்தின் பெருமையின் அளவுகோல்” என்றார்.

நான் சமுத்திரத்தைப் பார்க்கும் போதும், துருவப் பகுதியை மூடியிருக்கும் பனியின் மேலே பறக்கும் போதும், இரவு வானத்தில் லட்சக் கணக்கான விண் மீன்களைப் பார்க்கும் போதும், இந்தப் படைப்புகளின் மத்தியில் நான் மிகச் சிறியவனாகத் தோன்றுகின்றேன்.  படைக்கப் பட்ட உலகம் இத்தனை பரந்து, விரிந்து காணப் படுமாயின், அதனை தன் வார்த்தையாலே படைத்தவர் எத்தனை பெரியவர்?

தேவனுடைய பெரிய தன்மையையும், நாம் ஒன்றுமில்லை என்ற உணர்வையும் தாவீது வெளிப் படுத்துகின்றார்.  “மனுஷனை நீர் நினைக்கிறதற்கும் மனுஷ குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?” (சங். 8:4) என்கிறார். ஆனால் தேவன், “ ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரம பிதா பிழைப்பூட்டுகிறார். அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?” என்கின்றார் (மத். 6:26).

நான் என்னைக் குறித்து சிறியதாகவும், ஒன்றுமில்லாததாகவும் உணரலாம். ஆனால் என்னுடைய தந்தையின் கண்களில் நான் விலையேறப் பெற்றவன். நான் ஒவ்வொரு முறை சிலுவையைப் பார்க்கும் போதும் என்னுடைய மதிப்பு அங்கே விளங்குகின்றது.  தேவன் என்னை மீட்டு, நான் அவரோடு இருக்கும் படி மனப் பூர்வமாய் செலுத்திய கிரயம், நான் எத்தனை விலயேறப் பெற்றவன் என்பதற்குச் சான்றாகவுள்ளது.