பாரீஸிலுள்ள நாட்டர் டேம் கதீட்ரல் தேவாலயம், கண்ணைக் கவரும் அழகிய கட்டிடம். அதின் கட்டிடக் கலையை வார்த்தையால் வர்ணிக்க முடியாது. அதிலுள்ள கண்ணாடியின் வண்ணங்களும், உள் அலங்காரமும் காண்போரை பிரமிக்கச் செய்யும். ஆனால் நூற்றாண்டுகள் கடந்த பின்னர் பாரீஸில் மிக உன்னத நிலையிலிருந்த இந்தக் கட்டிடம் இப்பொழுது சிதைந்து கொண்டிருக்கிறது. காலமும், சுற்றுச் சூழலின் மாசுவும் அதன் உயர்ந்த நிலையை அழித்து விட்டன. இப்பொழுது அந்த அழகிய கட்டிடம் செப்பனிடப்பட வேண்டிய நிலையிலுள்ளது.

எட்டு நூற்றாண்டுகளாக மிளிர்ந்த இந்த ஆலயத்தை நேசிப்பவர்கள் அதனைக் காப்பாற்ற முன் வருகின்றனர். சமீபத்தில் பிரான்ஸ் அரசு ஆறு மில்லியன் டாலர்களை இந்த பேராலயத்தைச் செப்பனிட ஒதுக்கியது. இக் கட்டிடத்தைத் தாங்கி நிற்கும் வெளிப்புறத் தூண்கள் சரி செய்யப்பட வேண்டும். அவற்றின் வெளிப்புறக் கற்கள் திரும்பப் பதிக்கப்பட வேண்டும். அதின் மேற்புற கூரையிலும் வேலைகளுள்ளன. இதில் நிறைய பணம் செலவிடப்படவுள்ளது. ஏனெனில் இந்த பழங்கால பேராலயம் அநேகரின் நம்பிக்கைக்கு அடையாளமாகத் திகழ்கின்றது.

கட்டிடங்களுக்கு எது உண்மையோ அது நமக்கும் கூடப் பொருந்தும். இந்தப் பழங்கால ஆலயத்தைப் போன்று நம்முடைய சரீரமும் பார்வைக்கு மிகவும் பழுதடைந்ததாகக் காட்சியளிக்கின்றது. அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு நல்ல செய்தியை விளக்குகின்றார். நம்முடைய புறம்பான மனிதன் இளமையின் துடிப்பை படிப்படியாக இழக்கலாம். ஆனால் உள்ளான மனிதன், அதாவது ஆவியின் மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகின்றான் (2 கொரி. 4:16).

“நாம் தேவனுக்குப் பிரியமாய் இருக்க நாடுகிறோம்” (5:9) ஆவியாயிருக்கிற கர்த்தரால் நிறைந்து அந்தச் சாயலாகத்தானே மகிமையின் மேல் மகிமையடைந்து மறுரூபப் படுகிறோம். (3:18 எபேசியர் 5:18)  நம்முடைய புறம்பான சரீரம் எப்படித் தோன்றினாலும் சரி, நம்முடைய ஆவியின் மனிதனின் வளர்ச்சி என்றும் ஓய்வதில்லை.