பிரிட்டனைச் சேர்ந்த திரைப் பட குழுவினரின் செய்திப் படக் காட்சிகளைக் கண்டு வியந்து நின்றேன். அதில் ஆறு வயது நிரம்பிய பிளானரி ஓ’கான்னோர்  என்ற சிறுமியை, அவளது குடும்பப் பண்ணையில் வைத்து 1932ஆம் ஆண்டு படம் எடுத்திருந்தனர். பிளானரி, பிற்காலத்தில் அமெரிக்க தேசத்தால் பாராட்டு பெற்ற, ஒரு பிரபல எழுத்தாளராகத் திகழ்ந்தார். அவள் இந்த படப் பிடிப்பு குழுவினரின் ஆர்வத்தை ஈர்க்கக் காரணமென்னவெனின், அவள் தன்னுடைய கோழிக் குஞ்சுவிற்கு பின்னோக்கி நடப்பதற்குக் கற்றுக் கொடுத்திருந்தாள். இந்த சாதனை ஒரு புதுமை மட்டுமல்லாமல், சரித்திரத்தில் ஒரு சிறந்த உருவகமாகவும் பார்க்கப் படுகிறது. பிளானரி தன்னுடைய இலக்கிய சிந்தனைகளையும், ஆன்மீக வெளிப்பாடுகளையும் கொண்டு முப்பத்தொன்பது ஆண்டுகளைப் பின்னோக்கி நடப்பதில் செலவிட்டாள். கலாச்சார வழி முறைகளுக்கு முரண்பாடாகச் சிந்தித்து, எழுத்தில் வெளிப்படுத்தினாள். வேதகமத்தை அடிப்படையாகக் கொண்ட அவளுடைய நோக்கங்கள் மக்கள் எதிர்பார்த்த மத எண்ணங்களுக்கு மாறாக அமைந்துள்ளதைக் கண்ட புத்தக வெளியீட்டாளர்களும் வாசகர்களும் திகைத்தனர்.

இயேசுவை உண்மையாகப் பின் பற்றுபவர்களின் வாழ்வு மத சடங்காச்சாரங்களுக்கு எதிராக அமைவதை தவிர்க்க முடியாது. இயேசு தேவ குமாரனாயிருந்தும் தன்னுடைய தெய்வீகத் தன்மையை நாம் எதிர்பார்த்த வகையில் வெளிப் படுத்தவில்லை (2;6) என்பதை பிலிப்பியர் நமக்குக் காட்டுகின்றது. அவர் தன்னுடைய வல்லமையை தன் “சொந்த நலனுக்காக” பயன்படுத்தவேயில்லை. ஆனால் அவர் தன்னை வெறுமையாக்கி, அடிமையின் ரூபத்தை எடுத்துக் கொண்டார். (வச. 6-7). எல்லாப் படைப்புகளுக்கும் காரணராகிய கிறிஸ்து, அன்பினிமித்தம் தன்னை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்தார். அவர் கவுரவத்தைப் பற்றிக் கொள்ளவில்லை, மாறாகத் தாழ்மையைத் தழுவிக் கொண்டார். அவர் அதிகாரத்தை வைத்துக் கொள்ளவில்லை. தன்னுடைய அதிகாரத்தை விட்டுக் கொடுத்தார். உலக ஆதிக்கத்தின் வழிக்கு எதிராக இயேசு பின்னோக்கி நடந்தார்.

வேதாகமும் இதனையே வலியுறுத்துகின்றது (வச. 5). இயேசுவைப்  போன்று நாமும் ஆதிக்கத்தை விட்டு விட்டு ஊழியம் செய்வோம். நம்மை முக்கியப் படுத்த முயற்சிப்பதற்குப் பதிலாகத் தாழ்மையைத் தெரிந்து கொள்வோம். வாங்குவதற்குப் பதிலாகக் கொடுப்போம். இயேசுவின் வல்லமையினால் நாமும் பின்னோக்கி நடப்போம்.