ஒரு சட்டத்திட்டத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மனிதனின் நிலையானது, உண்மையைச்சொல்லப் போனால், மிகவும் பரிதாபமான நிலையாகும். நான் என்ன செய்ய முடியும்? நான் தூங்கித்தான் போனேன். ஆனால், என்னுடைய பிள்ளைகள் சாயங்காலத்தில் வெளியே சென்றபோது, திடீரென ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அவர்கள் மிகவும் நல்ல பிள்ளைகள். ஆனால், அவர்கள் தங்கள் கைகளை வைத்து எங்கள் வீட்டின் முன் கதவினைத் திறக்கும் வரையில், நான் காத்திருப்பது என் வழக்கம். அவர்கள் வீட்டிற்கு பத்திரமாக வந்து சேர்ந்து விட்டதை அறிந்தபிறகே, நிம்மதியாக தூங்குவேன். நான் இப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நான் அதைத் தெரிந்துகொண்டேன். ஆனால் அன்று இரவு நான் திடீரென விழித்தபோது என்னுடைய மகள் புன்முறுவலோடு , ‘அப்பா நான் பத்திரமாக இருக்கிறேன். நீங்கள் தூங்குங்கள்”, எனக்கூறினாள். உயரிய நோக்கங்களையுடைய தகப்பன்மார்கூட சில சமயங்களில் தூங்கிவிடுவதுண்டு. அது தான் மனுஷீகம்.
ஆனால் இது ஆண்டவரிடத்தில் நடக்காது. தம்முடைய பிள்ளைகளுக்குரிய காப்பாளராக, பாதுகாப்பாளராக அவரைக் காட்டுவதில் (சங். 121) மறுஉறுதி அளிக்கிறது. சங்கீதக்காரன் நம்மைக் காக்கிற தேவன், ‘உறங்குவதுமில்லை” என எழுதுகிறார். (வச. 3) அதை மீண்டும் வலியுறுத்த வசனம் 4ல் குறிப்பிடுகிறார். அவர் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை என திரும்பவும் பாடுகிறார்.
உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவர் வேலையில் தேவன் தூங்குகிறதுமில்லை, அவர் எப்பொழுதும் நம்மை விழிப்புடன் காக்கிறவராயிருக்கிறார். மகன்கள், மகள்கள், அத்தைகள், மாமாக்கள், தாய்மார்கள் ஏன் தகப்பன்மார்கள் எல்லாரையும் அவர் கண்விழித்து பாதுகாக்கிறார். இதை அவர் செய்யவேண்டியதில்லை. ஆனால், அவருடைய அதிகப்படியான அன்பினால், அவர் அந்த வாக்குத்தத்தைத் தெரிந்து கொண்டு இருக்கிறபடியால், அது பாடப்படவேண்டிய வாக்குத்தத்தமாக இருக்கிறது.
எந்தெந்த வழிகளில் தேவனுடைய பிரசன்னத்தை நீங்கள் உணருகிறீர்கள்? அப்படி உணராவிடில், எந்த சத்தியத்தின் மேல் நீங்கள் சார்ந்து இருக்கலாம்?
தகப்பனே! எங்கள் வாழ்வில் உம்முடைய தொடர்ச்சியான அக்கறைக்காக உமக்கு ஸ்தோத்திரம்! ஆனால் அது பிரச்சனைகளில்லாத வாழ்க்கை என்கின்ற அர்த்தமல்ல. ஆனால் உம்முடைய அன்பிற்கும், பிரசன்னத்திற்கும் மிகவும் நெருக்கமாக இருக்கக்கூடிய வாழ்க்கை. நீர் உம்முடைய கிரியைகளை நடப்பிக்கிறீர் என்கின்ற உண்மையில் நாங்கள் நம்பிக்கையோடு இளைப்பாற எங்களுக்கு உதவி செய்யும்.