எலன் லாங்கர் என்ற பெண்மணி 1975ம் ஆண்டு ‘கட்டுப்பாட்டின் மாயை” என்ற தலைப்பின் கீழே நம்முடைய வாழ்க்கையின் பலதரப்பட்ட சூழ்நிலையில், நம்முடைய அதிகாரத்தை நாம் பயன்படுத்துவதைக் குறித்த ஒரு ஆராய்ச்சியினை மேற்கொண்டார். அதில் அவர் கண்டுகொண்ட உண்மை என்னவெனில், பல சூழ்நிலைகளில் நம்முடைய ஆதிக்கத்தை உயர்த்தி மதிப்பிட்டுக் கொள்ளுகிறோம். இந்த ஆராய்ச்சியானது, மாயையான தோற்றத்தினை எவ்வாறு உடைத்துப் போடுகிறது என்பதையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது.
லாங்கரின் இந்த ஆராய்ச்சியானது, பல மக்களால் செய்து பார்க்கப்பட்ட பரிசோதனைகளை உள்ளடக்கியதாக இருந்தது. அது புத்தக வடிவில் வெளியிடப்பட ஆயத்தமாக இருந்தது. ஆனால், யாக்கோபு இந்தக் கருத்தினை, லாங்கர் கண்டுபிடிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே இதைக் கண்டுபிடித்தார். யாக்கோபு 4ம் அதிகாரத்தில், ‘மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோம் என்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.” (யாக். 4:13-14) என்று எழுதியுள்ளார்.
இந்த மாயமான தோற்றத்திற்கு, யாக்கோபு ஒரு தீர்வினை கொடுக்கிறார். அவர் முழுமையான ஆதிக்கத்தை உடையவருக்கு நேராகக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்: ‘ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.”
(யாக். 4:15). இந்த ஒருசில வசனங்களிலே யாக்கோபு, மனிதனின் நிலையற்ற தன்மையையும், அதற்கான மாற்று வழியையும் குறிப்பிடுகிறார்.
நாமும் நம்முடைய விதியானது நம் கைகளில் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், தேவன் தம்முடைய வல்லமையான கரங்களில் வைத்துத் தாங்குகிறபடியால், நாம் அவருடையத் திட்டங்களை விசுவாசிக்கலாம்.
என்னென்ன வழிகளில் நீங்கள் விதிக்கு கட்டுப்பட்டு வாழ்கிறீர்கள் என்ற மாயைக்கு அடிமையாகி இருக்கிறீர்கள்? நீங்கள் உங்கள் திட்டங்களை எவ்விதம் ஆண்டவருடைய கரங்களில் கொடுத்து, உங்கள் எதிர்காலத்தை அவர் கைகளில் கொடுக்கிறீர்கள்?
“மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.” (நீதிமொழிகள் 19:21)