என்னுடைய மகன் ஜெஃப் ஒரு ‘வீடில்லாத ஏழைகளின்” செயல்முறைத் திட்டத்தில் பங்கேற்றான். அவன் அந்த நகரத்தில் உள்ள தெருக்களில் மூன்று பகல் மற்றும் இரண்டு இரவுகளைக் கழித்தான். உறைந்த குளிரின் நடுவில் வெட்டவெளியில் தூங்கினான். உணவு இல்லாமல், பணமும், பாதுகாப்பான உறைவிடமும் இல்லாமல், புதிய மனிதர்களின் இரக்கத்தைச் சார்ந்து ஒரு நாள் தன் அடிப்படைத் தேவைகளை சந்திக்கும்படி வாழ்ந்தான். அவனுடைய ஆகாரமானது ஒரு பிரட் சாண்ட்விச் மட்டும் தான். அதுவும், அவன் ஒரு உணவு விடுதியில் மீதமுள்ள ரொட்டித்துண்டுகளைக் கேட்டுக்கொண்டிருக்கும் போது, அதைக் கேட்ட ஒரு மனிதன் அந்த சாண்ட்விச்சை வாங்கி கொடுத்தார்.

பிற்பாடு, ஜெஃப் என்னிடத்தில் இதைப்போன்ற கஷ்டமான காரியம் வேறொன்றுமில்லை என்று கூறினான். ஆனால், இது அவனுடைய வாழ்க்கையில் மற்றவர்கள் மேலிருக்கும அபிப்பிராயத்தினை அதிகப்படுத்தியது. இந்த வீடில்லாத ஏழைகளின் செயல் முறைத் திட்டத்திற்குப் பிறகு அவன் வீடில்லாத ஏழைகளைத் தேடிச்சென்று அவர்களை சந்தித்தான். யாரெல்லாம் தான் தெருவில் வாழ்ந்த போது தனக்கு உதவி செய்தனரோ, அவர்களுக்குத் தன்னாலான சில உதவிகளைச் செய்தான். அந்த ஏழைகள், அவன் உண்மையான ஏழை இல்லை என்றும், அந்த ஏழைகளின் பார்வையின் மூலம் வாழ்க்கையைப் பார்க்க விரும்பின அவனுடைய நல்ல எண்ணங்களுக்கு நன்றியுள்ளவர்களாய் மாறினார்கள்.

என் மகனின் அனுபவமானது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை என் மனதிற்குள் கொண்டு வந்தது. ‘வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத். 25:36,40) என்பார்.

அது ஒரு உற்சாகப்படுத்துதலின் வார்த்தையாகவோ, அல்லது ஒரு மூட்டை தானியமாகவோ இருக்கலாம். தேவன் நம்மை மற்றவர்களின் தேவைகளை சந்திக்கும்படி அன்புடன் அழைக்கிறார். நாம் மற்றவர்களின் மேல் காட்டக்கூடிய கனிவானது தேவனுக்குக் காட்டக்கூடிய கனிவாகும்.