உண்மையாக வாழ்ந்த ஒரு பெண்ணுடைய அடக்க ஆராதனைக்குச் சென்றிருந்தேன். ஏதோ மனதில் ஒரு நிறைவு. அந்தப் பெண் பிரபலமான நபர் அல்ல. சபையார், அக்கம்பக்கத்தார், நண்பர்கள் என்கிற வட்டத்திற்குள் வாழ்ந்தவர், அதைத் தாண்டி வேறு யாருக்கும் அவரைத் தெரியாது. ஆனால் இயேசுவையும், தன்னுடைய ஏழு பிள்ளைகளையும், இருபத்தைந்து பேரப்பிள்ளைகளையும் மிகவும் நேசித்தார். எப்போதும் சிரித்தமுகத்துடன் இருப்பார், எல்லாரையும் அன்பாக விசாரிப்பார், உடல் திடகாத்திராமா இருந்தார்.
“விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்” என்று பிரசங்கி சொல்கிறது. பிர 7:2. “ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்,” ஏனென்றால், வாழ்க்கையில் எது முக்கிய மென்பதை அங்கே அறிந்துகொள்ளலாம் (7:4). நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் கட்டுரையாளரான டேவிட் புரூக்ஸ், இரண்டுவித நல்லதன்மைகள் இருப்பதாகக் கூறுகிறார். ஒன்று, சுயவிபரப் பட்டியலில் சொல்லப்படுவது, இரண்டாவது, ஒருவருடைய அடக்க ஆராதனையின்போது சொல்லப்படுவது. சிலசமயங்களில் சுயவிபரப்பட்டியலில் உள்ளதுபோலவே அடக்கஆராதனையில் சொல்லப்படும், சில சமயங்களில் எங்காவது ஓரிடத்தில்தான் அவ்வாறு சொல்லப்படும் சந்தேகப்படும் நேரத்தில். புகழைத்தருகிற நல்ல குணங்களைத்தான் தேர்ந்தெடுங்கள்.
அந்தப் பெண்ணுக்கு சுயவிபரப் பட்டியலெல்லாம் கிடையாது. ஆனால் அவர் “நீதிமொழிகள் 31ன் ஸ்திரிபோல வாழ்ந்தவர்” என்று அவருடைய பிள்ளைகள் கூறினார்கள். தேவ பக்தியுள்ள ஒரு ஸ்திரியைப் பற்றி அங்கு சொல்லப்பட்டுள்ளது. பிள்ளைகள் இயேசுவிடம் அன்புகூரவும், மற்றவர்களை நேசிக்கவும் அவர் ஓர் ஊக்கசக்தியாக இருந்தார். “நான் கிறிஸ்துவைப்
பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்” என்று பவுல் சொன்னதுபோல, தங்களுடைய அம்மாவைப் போல ஒவ்வொருவரும் வாழவேண்டும் என்று சொன்னார்கள்.
உங்களுடைய அடக்க ஆராதனையில் என்ன சொல்லுவார்கள்? என்ன சொல்லப்பட விரும்புகிறீர்கள்? புகழ்தருகிற தன்மைகளை வளர்க்க காலம் பிந்தவில்லை. இயேசுவில் இளைப்பாறுங்கள். அவர் நமக்கு இலவசமாக இரட்சிப்பைத் தந்து நாம் எவ்வாறு வாழவேண்டும் என்று காட்டுகிறார்..
உங்கள் நற்பெயரை அல்லது சுயவிபரத்தைக் கெடுக்கிற விதத்தில் வாழ்கிறீர்களா? நற்பெயரைப் பெறவேண்டுமென வாழ்ந்தால், வாழ்க்கை எவ்வாறு மாற ஆரம்பிக்கும்?
பிதாவே, வாழ்க்கையில் எது முக்கியமோ அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ தைரியத்தைத் தாரும்.