எங்களுடைய மகன்களில் ஒருவரான பிரையன் ஓர் உயர்நிலை பள்ளியில் கூடைப்பந்து பயிற்சியாளராக இருக்கிறான். ஓர் ஆண்டு நடைபெற்ற வாஷிங்டன் மாகாண கூடைப்பந்து போட்டியில் அவனுடைய பள்ளி அணி தொடர் வெற்றியைக் குவித்தது. எனவே அங்கிருந்த நல்லெண்ணம் கொண்ட சிலர் வந்து, “இந்த வருட கோப்பையை வென்றுவிடுவீர்களா?” என்று கேட்டார்கள். அது விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களில் அழுத்தத்தை உண்டாக்கியது. அப்போது பிரையன் கையாண்ட ஒரு குறிக்கோள்:”சந்தோஷமாக விளையாடுங்கள்!”
எபேசுவின் மூப்பர்களுக்கு பவுல் எழுதின கடைசி வார்த்தைகளை எண்ணிப்பார்க்கிறேன்: “என் ஓட்டத்தை சந்தோஷமாக முடிக்க… விரும்புகிறேன்” (அப் 20:24.) இயேசு தன்னிடம் ஒப்படைத்திருந்த பணிகளை முடிப்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. நானும் என்னுடைய குறிக்கோளாகவும் ஜெபமாகவும் வைத்திருக்கிற வார்த்தைகள் என்னவென்றால், “என் ஓட்டத்தை சந்தோஷமாக முடிக்க… விரும்புகிறேன்” அல்லது பிரையன் சொல்வதுபோல, “நான் சந்தோஷமாக விளையாடவேண்டும்” பிரையனின் அணியானது அந்த வருடத்தில், வெற்றிபெற்று அந்தக் கோப்பையைக் கைப்பற்றினார்கள்.
உலகு தரும் செய்திகள், அனுதின அழுத்தங்கள், உடல்நலப் பிரச்சனைகள் போன்ற பல விஷயங்கள் நம்முடைய நிம்மதியைப் பறிக்கலாம். ஆனாலும் நாம் தேவனிடம் கேட்டால், இவற்றையும் கடந்த மேலான ஒரு சந்தோஷத்தை அவர் தருவார். “என்னுடைய சந்தோஷம்” (யோவான் 15:11) என்று தேவன் சொல்லுகிறார் அல்லவா, அந்தச் சந்தோஷத்தைப் பெறலாம்.
இயேசுவினுடைய ஆவியின் கனிதான் சந்தோஷம். (கலா 5:22). எனவே ஒவ்வொரு நாள் காலையிலும், “நான் சந்தோஷமாக விளையாடவேண்டும், அதற்கு உதவும்” என்று அவரிடம் கேட்க மறக்கக் கூடாது. ஆசிரியரான ரிச்சர்ட் ஃபாஸ்டர் பின்வருமாறு சொல்கிறார்: “ஜெபிப்பது நம்மை மாற்றுகிறது. இது மிகப்பெரிய ஒரு கிருபை. நம்முடைய வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிப்பதற்கான ஒரு பாதையை தேவன் தருகிறாரென்றால், அவர் எவ்வளவு நல்லவரென்பது தெரிகிறது.”
உங்களை அதைரியப்படுத்துவது எது? உங்கள் சந்தோஷத்தை எங்கே காண்கிறீர்கள்?
தேவனே, நான் உம்மை நோக்கிப் பார்க்கிறேன். நீர் எனக்கு உண்மையுள்ளவராக இருந்ததை எண்ணி, நன்றி கூறுகிறேன். உம்முடைய சந்தோஷத்திற்குள் என்னை வழிநடத்தும்.