பயங்கர கார் விபத்து ஒன்றில் படுகாயமடைந்தார் மேரி அன் ஃபிரான்கோ. விபத்திலிருந்து உயிர்பிழைத்தாலும் கண்பார்வை முற்றிலும் பறிபோனது. “அதன்பிறகு இருளைத் தவிர வேறு எதையும் நான் பார்க்கவில்லை” என்று ஃபிரான்கோ சொன்னார். இருபத்தோரு வருடங்களுக்கு பிறகு, ஒரு சமயம் அவர் கீழே விழுந்ததில் அவருடைய முதுகில் அடிபட்டது. அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார் (கண் சம்பந்தமாக எந்தச் சிகிச்சையும் செய்யவில்லை.) அற்புதம் என்ன வென்றால், அவருடைய கண்பார்வை திரும்பக் கிடைத்தது! கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல் கடந்த நிலையில், முதன்முதலாக அப்போதுதான் தன் மகளுடைய முகத்தை அவர் பார்த்தார். ஃபிரான்கோவுக்கு எவ்வாறு பார்வை திரும்பக்கிடைத்தது என்பதற்கு விஞ்ஞான ரீதியில் பதிலில்லை என்கிறார் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர். இறுதியாக இருள் அகன்று, வெளிச்சத்தையும் அழகையும் அவரால் கண்டு ரசிக்கமுடிந்தது.

அறியாமை மற்றும் தீமையின் ஒரு மேகம் இந்த உலகத்தை மூடியுள்ளது; நாம் யாருமே தேவ அன்பைக் காணமுடியாதபடி அது செய்கிறது. ஏசா 25:7. இதை வேத வசனங்களும் சொல்லுகின்றன; நம்முடைய அனுபவத்திலும் காண்கிறோம். சுயநலம், பேராசை, சுயநிறைவு சிந்தை, அதிகாரம் மற்றும் புகழுக்கான பேராசை போன்றவை நம் பார்வையை மங்கச் செய்கின்றன; சத்தியமானவரும் மாறாதவருமான, “அதிசயமானவைகளைச் செய்த” தேவனை தெளிவாகப்பார்க்க முடியாதபடி செய்கின்றன. வசனம் 1.

‘மூடியிருக்கிற மூடல்” என்கிற வார்த்தைகள் பொதுமொழிபெயர்ப்பில் ‘துன்பத்துகில்” என்று உள்ளது. தனியே விடப்பட்டால் நாம் அந்தகாரத்தையும் குழப்பத்தையும் விரக்தியையும் மட்டுமே அனுபவிக்கிறோம். எதிலோ சிக்கிக்கொண்ட உணர்வும்தான் பெரும்பாலும் நம்மில் தடுமாற்றமும், காணப்படுகிறது; நமக்கு முன்னிருக்கும் பாதையை நாம் பார்க்கமுடிவதில்லை. தேவனுக்கு ஸ்தோத்திரம், தேவன் இறுதியாக ‘சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலை… அகற்றிப் போடுவார்” என்று ஏசாயா சொல்கிறார் (வச. 7).

தேவன் நம்பிக்கையற்றவர்களாக நம்மை விடமாட்டார். நம் பார்வையை மறைக்கிற எதையும் அவருடைய பேரன்பு அகற்றி, நன்மையான வாழ்க்கையும் பரிபூரண கிருபையும் நமக்கிருப்பதைக் காண்பித்து, ஆச்சரியமூட்டுவார்.